வுழூஃ, தயம்மும், குளிப்பு ஆகியவற்றின் முறைகள்
صفة الوضوء والتيمم والغسل:لوحة مصورة باللغة التامية ، من إعداد فضيلة الشيخ الدكتور هيثم سرحان، فيها ملخص صفة وضوء وتيمم وغسل النبي صلى الله عليه وسلم مع الصور التوضيحية . வுழூஃ, யம்மம் மற்றும் குளிப்பு பற்றிய விளக்கம். த ாகுப்பு: அஷ்தெய்க் கலாநிதி...
வுழூஃ, தயம்மும், குளிப்பு ஆகியவற்றின் முறைகள்
صفة الوضوء والتيمم والغسل:لوحة مصورة باللغة التامية ، من إعداد فضيلة الشيخ الدكتور هيثم سرحان،
فيها ملخص صفة وضوء وتيمم وغسل النبي صلى الله عليه وسلم مع الصور التوضيحية .
வுழூஃ, யம்மம் மற்றும் குளிப்பு பற்றிய விளக்கம்.
த ாகுப்பு:
அஷ்தெய்க் கலாநிதி கை ம் ெர்ைான் அவர்கள்.
மிழில் யாரிக்கப்பட்ட இப்பட அட்கடயில் நபி (ஸல்) அவர்களின் வுழூஃ , யம்மம் மற்றும் குளிப்பு பற்றிய சிறு விளக்கம், விளக்கப் படங்களுடன் முன்கவக்கப்படுகிைது.
வுழூஃ, தயம்மும், குளிப்பு ஆகியவற்றின் முறைகள்
1- வுழூஃ செய்பவருக்கு தனது உள்ளத்தில் தான் வுழூஃ செய்யப்போகிறேன் என்கின்ற எண்ணம் ஏற்பட வேண்டும். பின்னர் பிஸ்மில்லாஹ் என்று கூறி இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவிக்கொள்ளவார்.
2- பின்னர் வலது உள்ளங்கையில் தண்ணீர் எடுத்து நன்றாக வாய் கொப்பளித்து துப்பிவிடுவார். பின்னர் மூக்கின் இரு துவாரங்களுக்குள்ளும் தண்ணீரை எடுத்து, தன்னுடைய இடது ஆட்காட்டி விரலையும் பெருவிரலையும் மூக்கின் மீது வைத்து அதனை மூக்கில் இருந்து வெளியேற்றிவிடுவார்.
3- பின்னர் முகத்தைக் கழுவிக்கொள்வார். அதாவது வழமையில் தலைமுடி முளைக்கின்ற இடங்களிலிருந்து இரு தாடைகள் முடியும் வரை மேலிருந்து கீழாகவும் இரு காதுகளுக்கு இடையில் அகலத்திலும் கழுவிக்கொள்வார்.
4- பின்னர் இரு கைகளையும் விரல் நுனிகளில் இருந்து முழங்கைகளுடன் சேர்த்துக் கழுவிக்கொள்வார். வலதுகையை ஆரம்பமாகும் பின்னர் இடது கையையும் கழுவிக்கொள்வார்.
5- பின்னர் முழு தலையையும் தண்ணீரைத் தொட்டு தடவி ('மஸ்ஹ்'செய்து)கொள்வார். தனது இரு கைகளையும் முன் தலையிலிருந்து பிடரி வரை ஓடிச் சென்று பின்னர் முன் தலை வரை திருப்பிக் கொண்டுவருவார்.
6- பின்னர் தனது இரு ஆட்காட்டி விரல்களையும் இரு காதுகளின் ஓட்டைகளிலும் செலுத்தி, காதுகளின் மேற்புறத்தில் பெருவிரலால் 'மஸ்ஹ்' செய்து கொள்வார்.
7- பின்னர் இரு கால்களையும் கரண்டைக் கால்களுடன் சேர்த்துக் கழுவிக்கொள்வார்.
8- மார்க்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட அதிகப்படுத்துவதின் சட்டம் என்ன?
9- வுழூஃ செய்வதில் மார்க்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட அதிகப்படுத்துவது கூடாது. அதாவது [பேணுதல் என்ற அடிப்படையில்] மூன்று முறைகளை விட அதிகமாக கழுவுதல், முழங்கைக்கு மேலே இருக்கின்ற தோள்பட்டையை கழுவுதல், கரண்டைக் காலுக்கு மேலுள்ள கெண்டைக் காலைக் கழுவுதல், கழுத்தை மஸ்ஹ் செய்தல் போன்றவை.
10- வுழூஃ செய்து முடித்ததற்குப் பிறகு பின்வரும் துஆவை ஓதிக்கொள்வார்.
"أَشهَدُ أَنَّ لا إِلَهَ إِّلا اللهُ وَحدَهُ لا شَرِيكَ لَهُ ، وَأَشهَدُ أَنَّ مُحَمَّداً عَبدُهُ وَرَسُولُهُ"
திர்மிதியின் அறிவிப்பில் மேலதிகமாக பின்வரும் வார்த்தையும் இடம்பெற்றுள்ளது.
"اللَّهُمَّ اجعَلنِي مِنَ التَّّوَّابِينَ واجعَلنِي مِنَ المُتَطَهِّرِينَ".
[மொழிபெயர்ப்பாளரின் கருத்து: இரண்டாவது வார்த்தை ஆதாரப்பூர்வமானதா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது]
11- வுழூஃ செய்யும் முறை
12- வுழூஃ, தயம்மும், குளிப்பு ஆகியவற்றின் முறைகள்
13- வுழூஃவை முறிக்கும் காரியங்கள்:
1- முன் பின் துவாரங்களில் இருந்து வெளிப்படக்கூடியவை. சிறுநீர், மலம், காற்று போன்றவை.
2- தூங்குவதன் மூலமாக அல்லது மயக்கம் ஏற்படுவதன் மூலமாக புத்தி நீக்குதல்.
3- ஒட்டக இறைச்சி சாப்பிடுதல்.
----------------------------------------
1- தயம்மும் செய்யும் முறை
2- தண்ணீர் கிடைக்காததன் காரணமாக அல்லது தண்ணீரை பயன்படுத்துவதனால் கேடு விளையும் என்று பயந்ததன் காரணமாக சுத்தம் செய்ய வேண்டிய உறுப்புகளில் தண்ணீரைப் பயன்படுத்த முடியாமல் போனால் தண்ணீரால் சுத்தம் செய்வதற்குப் பகரமாக தயம்மும் அமையப்பெறும். அப்போது தண்ணீருக்குப் பகரமாக மண் பயன்படுத்தப்படும்.
3- மண்ணில் அடிக்கும் போது விரல்களை விரித்து இருக்க வேண்டிய அவசியமில்லை. மண்ணினால் கைகளை 'மஸ்ஹ்' செய்யும்போது விரல்களை குடைய வேண்டிய அவசியமுமில்லை.
4- தயம்மும் செய்வதற்கான எண்ணம் உள்ளத்தில் வரவேண்டும். பின்னர் பிஸ்மில்லாஹ் என்று கூற வேண்டும். பின்னர் ஒருமுறை பூமியில் இரு உள்ளங்கைகளையும் அடித்து, இரு உள்ளங்கைகளாலும் முகத்தையும் இரு கைகளின் மேற்புறங்களையும் மணிக்கட்டு வரை மஸ்ஹ் செய்ய வேண்டும்.
---------------------------------------
1- கட்டாயமான குளிப்பின் முறை
2- குளிப்புக்குரிய எண்ணம் உள்ளத்தில் வர வேண்டும். சப்தமின்றி பிஸ்மில்லாஹ் என்று கூற வேண்டும். பின்னர் முழு உடம்பிலும், அடர்த்தியற்ற மற்றும் அடர்த்தியான முடிகளுக்குக் கீழாலும் கூட தண்ணீர் படுமாறு செய்ய வேண்டும். அத்தோடு வாய் கொப்பளித்து, மூக்குக்கும் தண்ணீர் செலுத்தி கழுவி விட வேண்டும்.
3- குளிப்பைக் கட்டாயமாக்கக்கூடிய காரியங்கள்
1-ஜனாபத்: இந்திரியம் வெளிப்பட்டால் அல்லது இரு பால் உறுப்புக்களும் சந்திக்கும் விதத்தில் உடலுறவு கொண்டால் ஜனாபத் எனும் நிலை ஏற்படும்.
2-ஹைழ் மற்றும் நிபாஸ் இரத்தங்கள் வெளிப்படுதல்.
3- ஷஹீத் அல்லாத மரணம்.
4-காஃபிர் இஸ்லாத்தை ஏற்றல்.
4- தயாரிப்பு: கலாநிதி ஹைஸம் ஸர்ஹான் (மஸ்ஜிதுன் நபவியில் முன்னாள் ஆசிரியர், அஸ்-ஸுன்னஹ் கலாசாலையின் மேற்பார்வையாளர்:
http://mahadsunnah.com
5- இதனை விரும்பியவர்கள் பதிவிடலாம், வெளியிடலாம், விநியோகிக்கலாம்.
6- மொழிபெயர்ப்பை பெற்றுக்கொள்வதற்கு: http://sarhaan.com அல்லது பார்க் கோடை ஸ்கேன் செய்யவும்.
வுழூஃ, தயம்மும், குளிப்பு ஆகியவற்றின் முறைகள்
Scan QR Code | Use a QR Code Scanner to fast download directly to your mobile device