குர்ஆன் - தமிழ் மொழிபெயர்ப்பு
القرآن الكريم அல்குர்ஆன் வார்த்தைகளில் மிகச்சிறந்ததாகும்; ஏனெனில், அது அல்லாஹ்வின் வார்த்தையாகும். அதனை அல்லாஹ் வானவர்களில் மிகச் சிறந்தவரான ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மூலம், தூதர்களில்...
குர்ஆன் - தமிழ் மொழிபெயர்ப்பு
القرآن الكريم
அல்குர்ஆன் வார்த்தைகளில் மிகச்சிறந்ததாகும்; ஏனெனில், அது அல்லாஹ்வின் வார்த்தையாகும். அதனை அல்லாஹ் வானவர்களில் மிகச் சிறந்தவரான ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மூலம், தூதர்களில் மிகச் சிறந்தவரான முஹம்மத் ﷺ அவர்களின் உள்ளத்திற்கு, மிகச்சிறந்த இடமான கண்ணியமிக்க மக்கஹ்வில் வைத்து, மிகச்சிறந்த காலமான றமழான் மாதத்தில், மிகச் சிறந்த இரவான லைலதுல் கத்ர் இரவில், மிகச்சிறந்த மொழியான அரபு மொழியில் இறக்கியருளினான்.
குர்ஆனில் இருப்பது போன்று ஒரே ஒரு அத்தியாயத்தையேனும் கொண்டுவருமாறு மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் அல்லாஹ் சவால் விட்டிருக்கிறான்; ஆனால் எவராலும் அதனை கொண்டு வர முடியவில்லை. அதனை பாதுகாப்பதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றிருக்கிறான். இத்தனை காலத்திற்கும் எவராலும் அதில் இருக்கும் ஒரு எழுத்தைக்கூட கூட்டவோ குறைக்கவோ முடியவில்லை. அதில் ஸூறத்து பாதிஹஹ்வில் இருந்து ஸூறத்துந் நாஸ் வரை 114 அத்தியாயங்கள் இருக்கின்றன. அதனை ஓதுவதை அல்லாஹ் தன்பக்கம் நெருங்குவதற்கான ஒரு வணக்கமாக வைத்திருக்கிறான்; அதிலிருந்து ஓதுகின்ற ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகளை வைத்திருக்கிறான்.
குர்ஆன் - தமிழ் மொழிபெயர்ப்பு
Scan QR Code | Use a QR Code Scanner to fast download directly to your mobile device