Prophetic Hadeeth Encyclopedia
Search and read verified Prophetic hadeeth translations, explanations, benefits, categories and source attribution. Page 2.
Search the Hadeeth Encyclopedia
Smart instant results tolerate minor spelling mistakes, with every filter in one place.
ஒரு தீனாரின் கால்வாசி அல்லது அதைவிட அதிகான அளவில் கை வெட்டப்படும்
அல்லாஹ்வின் வார்த்தை மேலோங்கி உயர் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக போர் புரிகின்றாறோ அவர் அல்லாஹ்வின் பாதையில் உள்ளார் என்றார்கள்
அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பின் வரும் விடயம் பற்றி வினவப்பட்டது ஒரு மனிதர் தான் ஒரு வீரன் என்பதற்காக யுத்தம் புரிகின்றார். இன்னொருவர் இனமாச்சரியத்திற்காக யுத்தம் புரிகின்றார். மற்றவர் முகஸ்து…
நபி (ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கிடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தமது கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் ('பிஸ்மில்லாஹ்') கூறினார்கள். தக்பீரும் ('அல்லாஹு அக்பர்') சொன்னார்கள். மேலும், தமது காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக்கொண்டு அறுத்)தார்கள்
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கிடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தமது கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் ('பிஸ்மில்லாஹ்') கூறினார்கள். தக்பீரும் ('அல்லாஹு…
உங்களுக்கு முன்னிருந்தவர்களில் ஒரு மனிதர் இருந்தார். அவரிடம் ஒரு காயம் காணப்பட்டது. அவர் பொறுக்கமுடியாது, ஒரு கத்தியை எடுத்து, தனது கையை வெட்டிவிடவே, இரத்தம் பெருக் கெடுத்தோடி அவர் மரணித்துவிட்டார். அப்போது அல்லாஹ், 'என்னுடைய அடியான் என்னிடம் அவசரப்பட்டு வந்துவிட்டான். அவன் மீது நான் சுவனத்தை ஹராமாக்கி விடுகின்றேன்.' என்று கூறினான்
ஹஸன் அல்பஸரீ அவர்கள் கூறுகின்றார்கள் : ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அவர்கள் இந்தப் பள்ளிவாசலில் எமக்கு அறிவித்தார்கள். அவர்கள் அறிவித்ததில் இருந்து இன்னும் நாம் மறக்கவே இல்லை. ஜுன்துப் (ரலி) அவர்கள் நபியவர்கள் மீது இட்டுக்கட்டியிருப்பார் என்று நாம் பயப்படவும்…
நீங்கள் சாதாரண பட்டையோ அலங்காரப்பட்டையோ அணிய வேண்டாம். தங்கப் பாத்திரத்திலோ வெள்ளிப் பாத்திரத்திலோ குடிக்க வேண்டாம். அவ்விரண்டின் தட்டுகளில்; நீங்கள் சாப்பிட வேண்டாம். ஏனெனில் அவை இவ்வுலகில் அவர்களுக்குரியதும், மறுமையில் எங்களுக்குரியதுமாகும்
அப்துர் ரஹ்மான் இப்னு அபீலைலா அவர்கள்அறிவிக்கிறார்கள்: ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நாம் இருந்தோம். அப்பொழுது அவர்கள் பருகுவதற்கு தண்ணீ|ர் கேட்டார்கள். நெருப்பு வணங்கி ஒருவன் தண்ணீர் கொண்டு வந்து கோப்பையை அவர்களின் கையில் வைக்க உடனே அக்கோப்பையை தண்ணீருடன் எறிந்து…
(ஆண்களில்) யார் இம்மையில் பட்(டா)டை அணிகிறாரோ அவர் மறுமையில் அதை அணிய மாட்டார்'
எந்தவொரு மனிதருக்கும், அல்லாஹ் விதித்துள்ள ஒரு தண்டனைகளிலேயே தவிர, பத்துக் கசையடிகளுக்கு மேலால் அடிக்கக்கூடாது
'யாராவது, வேட்டை நாய், அல்லது காவல் நாய் ஆகியவையல்லாத வேறு நாய்களை வைத்துக் கொண்டிருந்தால், அவரது அமல்களில் இருந்து ஒவ்வொரு நாளும் இரு கீராத்கள் அளவு குறையும்
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 'யாராவது, வேட்டை நாய், அல்லது காவல் நாய் ஆகியவையல்லாத வேறு நாய்களை வைத்துக் கொண்டிருந்தால், அவரது அமல்களில் இருந்து ஒவ்வொரு நாளும் இரு கீராத்கள் அளவு குறையும். ஸாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்…
யார் எமக்கெதிராக ஆயுதமேந்துகிறாரோ அவர் எம்மைச் சார்ந்தவரல்லர்'
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல் அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த…
உங்கள் மீது சந்தேகம் கொண்டதனால் நான் உங்களை சத்தியம் செய்யும்படி வேண்டவில்லை.என்றாலும் என்னிடம் ஜிப்ரீல் வந்து: நிச்சயமாக அல்லாஹ; உங்களைப் பற்றி பெருமையாக மலக்குகளிடம் பேசுகிறான் என்று என்னிடம் அறிவித்தார்கள்
அபூ ஸஈதினில் குத்ரிய்யி ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: முஆவியா ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் பள்ளியிலே வட்டமாக அமர்ந்திருந்தவர்களை விழித்து எதற்காக நீங்கள் உட்கார்ந்துள்ளீர்கள்? என வினவினார்கள் (என்ன விடயம் அமர உட்கார செய்தது?- என வினவினார்கள்.) அதற்கு அல்லாஹ்வை நி…
இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை, அவ்விருவரில் ஒருவர் தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை, மற்றொருவர் புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு
இப்னுஅப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றபோது; 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை, அவ்விருவரில் ஒருவர் தாம…

