HadeethEnc · 1.36.0
ஒரு தீனாரின் கால்வாசி அல்லது அதைவிட அதிகான அளவில் கை வெட்டப்படும்
Available translations
Choose an available translation of this Hadeeth
01
Hadeeth text
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, உம்முல் முஃமினீன் ஆஇஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஒரு தீனாரின் கால்வாசி அல்லது அதைவிட அதிகான அளவில் கை வெட்டப்படும்.
02
Explanation
இங்கு நபியவர்கள், ஒரு திருடன் ஒரு தீனாரின் கால்வாசி அளவோ, அதற்கு மேற்பட்ட அளவோ திருடினால் அவனது கை வெட்டப்படும் எனத் தெளிவுபடுத்துகின்றார்கள். அது, 1.06 கிராம் தங்கத்துக்கு நிகரான பெறுமதியைக் கொண்டதாகும்.
03
Benefits
திருட்டு பெரும்பாவங்களில் ஒன்றாகும்.
திருடனுக்கான தண்டனையை அல்லாஹ் வரையறுத்துள்ளான். அதாவது அவனது கை வெட்டப்படவேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்: 'திருடும் ஆணின் மற்றும் பெண்ணின் கைகளை வெட்டுங்கள் (அல் மாஇதா : 38) நபியவர்களின் ஸுன்னா, வெட்டுவதற்கான நிபந்தனைகளை தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த ஹதீஸில் 'கை' என்பதன் மூலம் நாடப்படுவது, மணிக்கட்டை, கையின் ஏனைய பகுதிகளில் இருந்து பிரிக்கும் மூட்டில் இருந்து வெட்டுவதாகும்.
மக்களது சொத்துக்களைப் பாதுகாத்தல், அத்துமீற நினைக்கும் ஏனையோரை எச்சரித்தல் என்பன, திருடனின் கையை வெட்டுவதில் உள்ள சில மதிநுட்பங்களாகும்.
தீனார் என்பது, தங்கத்தில் ஒரு மிஸ்கால் அளவாகும். தற்போதைய அளவின் படி, 24 கரட் தங்கத்தில் 4.25 கிராமுக்கு சமமாக உள்ளது. எனவே, ஒரு தீனாரில் நான்கில் ஒன்று என்பது, ஒரு கிராமை விட சற்று அதிகமாக இருக்கும்.

Attribution
[இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]
Categories
Share
Share hadeeth
Sharing options · 0 Total shares