நிச்சயமாக சில குழப்பங்கள் நிகழும். பின்பு ஒரு குழப்பம் நிகழும். அதில் அமர்ந்திருப்பவர், நடந்து செல்பவரை விட சிறந்தவர். அதில் நடந்து செல்பவர், அதற்காக விரைந்து செல்பவரை விடச் சிறந்தவர்
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
உஸ்மான் இப்னு ஷஹ்ஹாம் அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நானும் பர்கத் அஸ்ஸப்கீ அவர்களும் முஸ்லிம் இப்னு அபீ பக்ரா அவர்களிடம் சென்றோம். அவர் தனது காணியில் இருந்து கொண்டிருந்தார். நாம் அவரிடம் நுழைந்து, 'உங்களது தந்தை குழப்பங்கள் பற்றி ஏதாவது ஹதீஸைக் கூற நீங்கள் கேட்டுள்ளீர்களா?' எனக் கேட்டோம். அதற்கவர்கள் இவ்வாறு கூறினார்கள் : 'ஆம். அபூ பக்ரா (ரல்) அவர்கள் அவர்கள் அறிவிப்பதை நான் கேட்டுள்ளேன். நபியவர்கள் கூறியதாக அவர்கள் இவ்வாறு கூறினார்கள் : நிச்சயமாக சில குழப்பங்கள் நிகழும். பின்பு ஒரு குழப்பம் நிகழும். அதில் அமர்ந்திருப்பவர், நடந்து செல்பவரை விட சிறந்தவர். அதில் நடந்து செல்பவர், அதற்காக விரைந்து செல்பவரை விடச் சிறந்தவர். அறிந்து கொள்ளுங்கள்! அது இறங்கி விட்டால் அல்லது நிகழ்ந்து விட்டால், யாரிடம் ஒட்டகம் இருக்கின்றதோ, அவர் தனது ஒட்டகங்களுடன் போய் இருந்து கொள்ளட்டும். யாரிடம் ஆட்டு மந்தை இருக்கின்றதோ, அவர் தனது ஆட்டு மந்தையுடன் போய் இணைந்துகொள்ளட்டும். யாரிடம் ஒர நிலப்பூமி இருக்கின்றதோ, அவர் தனது நிலத்தில் போய் இருந்து கொள்ளட்டும். அப்போது ஒரு மனிதர், 'அல்லாஹ்வுடைய தூதரே! ஒட்டகமோ, ஆட்டு மந்தையோ, நிலமோ இல்லாதவர் பற்றி நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?' என்று கேட்ட போது, 'தனது வாளை நோக்கிச் சென்று, அதன் கூரிய பகுதியை ஒரு கல்லால் அடித்து (உடைத்து) விடட்டும். பின்பு, அவரால் தப்பமுடியுமாக இருந்தால், தப்பிக் கொள்ளட்டும். யா அல்லாஹ்! நான் எத்திவைத்துவிட்டேனா? யா அல்லாஹ்! நான் எத்திவைத்துவிட்டேனா? யா அல்லாஹ்! நான் எத்திவைத்துவிட்டேனா?' என்று கூறினார்கள். அப்போது ஒரு நபித்தோழர், நான் கட்டாயப்படுத்தப்பட்டு, இரு அணிகளில் ஒன்றுக்கோ, அல்லது இரு தரப்பினரில் ஒன்றுக்கோ அழைத்துச் செல்லப்பட்டு, ஒரு மனிதன் என்னை வாளால் வெட்டிவிட்டாலோ, அல்லது ஒரு அம்பு வந்து என்னைக் கொண்டுவிட்டலோ, எனது நிலை என்ன? என்பது பற்றிக் கூறுங்கள் என்று கேட்டபோது, 'உனது பாவமும், அவனது பாவமும் அவனையே சேரும். அவன் நரகவாதிகளில் இருப்பான்' என்று கூறினார்கள்.
Explanation
Benefits
நவவீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : 'அதில் அமர்ந்திருப்பவர் நின்றுகொண்டிருப்பவரை விடச் சிறந்தவர்' என்று நபியவர்கள் கூறியிருப்பதன் அர்த்தமாவது, அதன் மோசமான பாரதூரத்தைத் தெளிவுபடுத்துவதும், அதனைத் தவிர்த்து விலகிச் செல்வதைத் தூண்டுவதும், மேலும், அதன் தீங்கும் குழப்பமும் அதனோடு சம்பந்தட்டிருக்கும் அளவைப் பொறுத்து இருக்கும் என்பதைத் தெளிவு படத்துவதுமாகும்.
நவவீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : அங்கு செல்ல நிர்ப்பந்திக்கப்படுபவரை விட்டும் பாவம் நீக்கப்படுகின்றது. ஆனால் கொலை செய்வதைப் பொறுத்தவரை, நிர்ப்பந்தத்தின் மூலம் அனுமதிக்கப்படமாட்டாது. மாறாக, ஏவப்பட்ட ஒன்றிற்காக நிர்ப்பந்திப்பவர் பாவியாவார் என்பது ஏகோபிக்கப்பட்ட கருத்தாகும்.
இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : வேறு சிலர் இவ்வாறு கூறுகின்றார்கள் : ஒரு கூட்டம் ஆட்சியாளர் மீது அடர்ந்தேறி, தம் மீது கடமையானவற்றை நிறைவேற்ற மறுத்து, யுத்தப் பிரகடனம் செய்தால், அவர்களுடன் யுத்தம் செய்வது கட்டாயமாகும். அதேபோன்று, இரு தரப்பினர் தமக்கிடையில் யுத்தம் செய்துகொண்டால், சக்தியுள்ள ஒவ்வொருவரும், தவறிழைக்கும் தரப்பினரின் கையைப் பிடித்து நிறுத்துவதும், சத்தியத்தில் உள்ள தரப்புக்கு உதவுவதும் கட்டாயமாகும். இதுவே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். வேறு சில அறிஞர்கள் சற்று விரிவாக விளக்குகின்றனர். அவர்கள் கூறுவதாவது, முஸ்லிம்களுக்கென்று பொது இமாம் (ஆட்சியாளர்) இல்லாத நிலையில், முஸ்லிம்களின் இரு தரப்பினருக்கு மத்தியில் நடைபெறும் எந்த யுத்தத்திலும் கலந்துகொள்வது தடுக்கப்படும். இந்தப் பாடத்திலும் ஏனைய பாடங்களிலும் வரும் இவ்வாறான நபிமொழிகள் இதனைக் குறிப்பதாகவே புரிந்துகொள்ளப்படவேண்டும்.
நவவீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : குழப்பங்களில் யுத்தம் செய்வது பற்றி அறிஞர்கள் கருத்துவேறுபாடுகொண்டுள்ளனர். சிலர், முஸ்லிம்களுக்கு மத்தியில் நடைபெறும் குழப்பங்களில் யுத்தம் செய்யக் கூடாது, அவனது வீட்டில் நுழைந்து, அவனைக் கொலைசெய்ய முயற்சித்தாலும், அவனால் தன்னைக் காத்தக் கொள்வதற்காகப் போரிடமுடியாது என்று கூறுகின்றனர். ஏனெனில், அவ்வாறு தேடிவருபன். ஒரு வலிந்துரை அடிப்படையிலேயே வருகின்றான். இது, நபித்தோழர் அபூ பக்ரா (ரலி) போன்றோரது கருத்தாகும். இப்னு உமர், இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) போன்றோரது கருத்தாவது, அவன் அவற்றில் பங்கு கொள்ளமாட்டான். ஆனால், அவனை நாடிவந்தால், தன்னைக் காத்துக் கொள்வான். இவ்விரு தரப்பினரும், இஸ்லாத்தில் தோன்றும் எல்லாக் குழப்பங்களையும் விட்டு ஒதுங்க வேண்டும் என்பதில் ஏகோபித்துள்ளனர். பெரும்பாலான நபித்தோழர்கள், தாபிஈன்கள் மற்றும் பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாவது, குழப்பங்களின் போது, சத்தியத்தில் இருப்பவருக்கு உதவுவதும், அவரோடு இணைந்து, அத்துமீறுபவர்களுக்கு எதிராக யுத்தம் செய்வதும் கடமையாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்;" இதுவே சரியான கருத்தாகும். இந்த ஹதீஸ்கள், சத்தயித்தில் யார் இருக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்ளாதவரைத் தான் குறிக்கின்றது என்றோ, அல்லது எந்த நியாயங்களும் இன்றி, அநியாயமாக யுத்தம் செய்யும் இரு தரப்பினரைக் குறிக்கின்றது என்றோ புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

