'உங்களுக்குச் சில ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்; தீமையையும் காண்பீர்கள். தீமையை (மனதால்) வெறுத்தவர் பிழைத்தார்; மறுத்தவர் தப்பித்தார். (இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உம்முல் முஃமினீன் உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள் : 'உங்களுக்குச் சில ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்; தீமையையும் காண்பீர்கள். தீமையை (மனதால்) வெறுத்தவர் பிழைத்தார்; மறுத்தவர் தப்பித்தார். (இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)' என்று கூறினார்கள். மக்கள், 'அல்லாஹ்வின் தூதரே! அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?' என்று கேட்டார்கள். 'இல்லை. அவர்கள் தொழுகையை நிறைவேற்றும் வரை (வேண்டாம்)' என்று கூறினார்கள்.
Explanation
பின் தோழர்கள் அவர்களை எதிர்த்து நாம் போராடவா என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவினார்கள். அதற்கு நபியவர்கள் அவர்கள் தொழுகையை நிலைநாட்டும் வரை போர் தொடுக்க வேண்டாமெனத் தடுத்தார்கள்.
Benefits
தீமையை ஏற்று திருப்தியடைவதும் அதற்கு துணைபோவதும் தடுக்கப்பட்டுள்ளது. அதனை தடுப்பதும் கண்டிப்பதும் கடமையாகும்.
பிரதிநிதிகள் மார்க்கத்திற்கு முரணான செயலை உருவாக்கினால் மக்கள் அதற்கு கட்டுப்படுவது கூடாது.
முஸ்லிம் பிரதிநிதிகள் -ஆட்சியாளர்களுக்கெதிராக கிளர்ச்சி செய்வதன் விளைவாக குழப்பம், இரத்தம் சிந்துதல், பாதுகாப்பு அற்றுப்போதல் போன்ற நிலைகள் ஏற்படுவதால் கிளர்ச்சி செய்வது தடுக்கப்பட்டுள்ளது. எனவே பாவிகளான தலைவர்களது தீமைகளை சகித்துக் கொண்டு, அவர்களது துன்புறுத்தல்களைப் பார்த்து பொறுமை காப்பது சிறந்தது என மார்க்கம் கருதுகிறது.
தொழுகை இஸ்லாத்தின் மிகப்பெரும் குறியீடாகும், அதுவே இஸ்லாத்தையும் நிராகரிப்பையும் வேறுபடுத்தக்கூடிய மிகப்பெரும் அடையாளம்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

