ரமழான் மாதம் வந்துவிட்டால் நீங்கள் உம்ராவை நிறை வேற்றுவாயாக ! ஏனெனில் அம்மாதத்தில் நிறை வேற்றப்படும் உம்ரா வணக்கம் ஹஜ்ஜு வணக்கத்துக்கு நிகராகும் என்று கூறினார்கள்
இப்னுஅப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்ஸாரிப் பெண் ஒருவரை விழித்து -இப்பெண்ணின் பெயரை இப்னு அப்பாஸ் கூறினார்கள் ஆனால் நான் அவளுடைய பெயரை மறந்துவிட்டேன்.- 'எம்முடன் ஹஜ்ஜு செய்வதற்கு வருவதை உம்மை எது தடுத்த…

