முஃமினுக்காக- இறைவிசுவாசிக்காக சுவர்க்கத்தில் உள்ளிருந்து வெறுமையாக இருக்கும் ஒரு முத்திலான கூடாரமொன்று இருக்கும். அதன் நீளம் முப்பது மைல் தொலைவைக் கொண்டதாகும். அதிலே இறைநம்பிக்கையாளருக்கான துணைவியர் இருப்பர். அவர்களிடம் அவர் சென்று வருவார். ஆனால் அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாது
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : முஃமினுக்காக- இறைவிசுவாசிக்காக சுவர்க்கத்தில் உள்ளிருந்து வெறுமையாக இருக்கும் ஒரு முத்திலான கூடாரமொன்று இருக்கும். அதன் நீளம் முப்பது மைல் தொலைவைக் கொண்டதாகும். அதிலே இறைநம்பிக்கையாளருக்கான துணைவியர் இருப்பர். அவர்களிடம் அவர் சென்று வருவார். ஆனால் அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாது.
Explanation
சொர்க்கத்தில் ஒரு முஃமினுக்கு, மிகப் பிரமாண்டமானதும் விசாலமுமான ஒரு பெரிய கூடாரம் இருக்கும். அது துளையிடப்பட்ட ஒரு காலியான முத்தினால் உருவாக்கப்பட்டிருக்கும். அதன் அகலமும் நீளமும் வானில் அறுபது மைல் அளவு இருக்கும். அந்த கூடாரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும், திசையிலும், நான்கு மூலைகளிலும் மனைவிகள் இருப்பார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் காணமாட்டார்கள். அந்த முஃமின் அவர்களிடையே சென்று வருவார்.
Benefits
அல்லாஹ் அவர்களுக்காகத் தயார் செய்திருக்கும் மகத்தான இன்பங்களை தெளிவு படுத்துவதன் மூலம் நற்காரியங்களில் ஈடுபடுவதற்கு ஆர்வமூட்டுதல்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

