افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم.
#65116[சரியானது]
HadeethEnc · 1.36.0

'யார் அல்லாஹ்வைத் தன் இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மது (ஸல்) அவர்களைத் தன் தூதராகவும் கொண்டு திருப்தியாக ஏற்றுக்கொள்கிறாரோ அவர் ஈமானின் சுவையை சுவைத்துவிட்டார்.'

Available translations

Choose an available translation of this Hadeeth

01

Hadeeth text

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து கேட்டதாக அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் ரழியல்லாஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'யார் அல்லாஹ்வைத் தன் இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மது (ஸல்) அவர்களைத் தன் தூதராகவும் கொண்டு திருப்தியாக ஏற்றுக்கொள்கிறாரோ அவர் ஈமானின் சுவையை சுவைத்துவிட்டார்.'
02

Explanation

ஒரு உண்மையான விசுவாசி தனது ஈமானில் உண்மையாக இருந்து அதில் மனநிம்மதியைக் கண்டால், அந்த ஈமானின் விளைவாக உள்ளம் விரிவடைந்து ஆறுதல், மகிழ்ச்சி மற்றும் அல்லாஹ்வை நெருங்குவதால் கிடைக்கும் இன்பம் ஆகியவற்றை தனது இதயத்தில் அனுபவிக்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்த நிலையை அடைய, அவர் மூன்று விடயங்களை மனமுவந்து ஏற்று திருப்திகொள்ளவேணடும்;. அவை வருமாறு:

முதலாவது: அல்லாஹ்வை தனது இறைவனாகவும் இரட்சகனாகவும் ஏற்றுக் கொண்டு திருப்தி அடைய வேண்டும். அல்லாஹ் தனது இறைவனாக இருப்பதால், அவன் வழங்கும் வாழ்வாதாரங்கள் மற்றும் அவன் விதித்துள்ள பல்வேறு நிலைகளில் திருப்தி அடைய வேண்டும். இவற்றில் எதற்கும் அவன் இதயத்தில் எந்த முரண்பாடும் இருக்கக்கூடாது. அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த இறைவனையும் அவன் தேடக்கூடாது.

இரண்டாவது: இஸ்லாத்தை தனது மார்க்கமாக கொண்டு திருப்தி அடைய வேண்டும். இஸ்லாம் உள்ளடக்கியுள்ள பொறுப்புக்கள் மற்றும் கடமைகளில் அவன் திருப்தி அடைய வேண்டும். இஸ்லாத்தின் வழிகாட்டலைத் தவிர வேறு எந்த வழிகாட்டலையும் ஏற்று நடப்பவராக அவர் இருக்கக்கூடாது.

மூன்றாவது: நபிகள் நாயகம் (ﷺ) அவர்களைத் தனது தூதராகக் கொண்டு திருப்தி அடைய வேண்டும். நபி (ﷺ) அவர்களிடமிருந்து வந்த எந்த விஷயத்திலும் அவருக்கு எந்த சந்தேகமோ, தடுமாற்றமோ ஏற்படாத அளவுக்கு அவர் மன நிறைவுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அத்துடன் வாழ்க்கையில் நபியவர்களின் வழிமுறை மற்றும் முன்மாதிரிக்கு ஏற்ப செல்லும் பாதையை மட்டுமே பின்பற்றி செல்ல வேண்டும்.
03

Benefits

உணவு மற்றும் பானத்தை நாவால் சுவைத்தால், அதன் சுவையை உணர்வது போல் ஈமான் - இஸ்லாத்தின் மீதான நம்பிக்கை – என்பது இதயத்தால் அனுபவிக்கக்கூடிய ஒரு இனிமையையும், சுவையையும் கொண்டுள்ளது.
உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது மட்டுமே உணவு மற்றும் பானத்தின் சுவையை உணருவது போல, இதயம் தவறான ஆசைகள் மற்றும் தடைசெய்யப்பட்ட உணர்ச்சிகளிலிருந்து பாதுகாக்கப்படும்போது மட்டுமே ஈமானின் இனிமையை உணர்கிறது. ஒரு நோய்வாய்ப்பட்ட இதயம் ஈமானின் இனிமையை உணராது. மாறாக, சில நேரங்களில் அது அழிவுகரமான ஆசைகளையும் பாவச் செயல்களையும் மட்டுமே அனுபவிக்க ஆரம்பிக்கிறது.
ஒருவர் ஏதாவது ஒன்றில் திருப்தி அடைந்து, அது நல்லது என்று கருதினால், அவருக்கும் அந்த விடயமானது மிகவும் எளிதாக இருக்கும். இதன் காரணமாக அவர் திருப்தி அடைந்த விடயத்தில் எந்த சிரமத்தையும் உணர மாட்டார். அதில் உள்ள அனைத்தும் அவருக்கு மகிழ்ச்சியைத் தரும். அதன் மகிழ்ச்சி அவரது இதயத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கும். இதே போன்றுதான் இறைவிசுவாசி ஒருவரின் உள்ளத்தில் ஈமான் ஆழப்பதிந்து விட்டால் அவர் இறைவனுக்குக் கட்டுப்படுவது இலகுவாகிவிடும் அவரின் உள்ளமானது இன்பத்தை அனுபவிப்பதோடு, எந்த விதமான சிரமும் அவருக்கு இலகுவானதாக அமைந்து விடும்.
இப்னு கைய்யிம் (ரஹ்) கூறுகிறார்: இந்த ஹதீஸ் அல்லாஹ்வின் இறைமைத்துவம் (ருபூபிய்யா) மற்றும் (உலூஹிய்யா) தெய்வீக இருப்பில் திருப்தி அடைவது, அவனுடைய தூதரையும் அவனுடைய தூதரைப் பின்பற்றுவதிலும் திருப்தி அடைவது, அவனுடைய மார்க்கத்தை ஏற்று அதன் போதனைகளுக்கு கட்டுப்படுவதில் திருப்தி அடைவது போன்ற விடயங்களை இது உள்ளடக்கியுள்ளது.

Attribution

[இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

Categories

Share

Share hadeeth

Sharing options · 0 Total shares

Share

← Back to encyclopedia
Shopping Basket

Loading...