எனது ஆன்மா எவன் கைவசம் உள்ளதோ அவனின் மீது சத்தியமாக நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தொழுகைக்கு ஒப்பாகும் அளவிற்கு தொழுகை நடாத்தினேன். நபியவர்கள் இவ்வுலகைவிட்டு பிரியும் வரை அவர்களின் தொழுகை இவ்வாறே இருந்தது
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் : ஒவ்வொரு கடமையான மற்றும் ஸுன்னத்தான தொழுகைகளிலும், ரமழானிலும் அதுவல்லாத நேரங்களிலும் தக்பீர் கூறுவார்கள்.தொழுகைக்காக எழுந்து நின்றால் (இஹ்ராம்)தக்பீர் கூறுவார்கள், ருகூவிற்கு செல்லும் போது தக்பீர் கூறுவார்கள், ருகூஉலிருந்து முதுகை நிமிர்ததும் போது 'ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதஹ்' என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து ஸுஜூதிற்கு செல்ல முன் 'ரப்பனா வலகல் ஹம்து' என்று கூறுவார்கள், பின்பு (ஸஜ்தாவுக்காகக்) குனியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு தலையை (ஸஜ்தாவிலிருந்து) உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு (இரண்டாவது) ஸஜ்தாச் செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு அதிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். இவ்வாறே தொழுகையின் எல்லா ரக்அத்களிலும் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் எழும்பும் போதும் தக்பீர் கூறுவார்கள். தொழுகையை முடித்ததும் அபூஹுரைரா ரழியல்லாஹு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: எனது ஆன்மா எவன் கைவசம் உள்ளதோ அவனின் மீது சத்தியமாக நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தொழுகைக்கு ஒப்பாகும் அளவிற்கு தொழுகை நடாத்தினேன். நபியவர்கள் இவ்வுலகைவிட்டு பிரியும் வரை அவர்களின் தொழுகை இவ்வாறே இருந்தது.
Explanation
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு தொழுகையை முடித்ததன் பின் எனது ஆன்மா யாரின் கைவசம் உள்ளதோ அவன்மீது சத்தியமாக நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தொழுகைக்கு ஒப்பாகும் அளவிற்கு தொழுகை நடாத்தினேன். நபியவர்கள் இவ்வுலகைவிட்டு பிரியும் வரை அவர்களின் தொழுகை இவ்வாறே இருந்தது எனக் கூறினார்கள்.
Benefits
நபியவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றி ஓழுகுவதிலும், அவர்களின் ஸுன்னாவை –வழிமுறையை பாதுகாப்பதிலும் ஸஹாபாக் களுக்கிருந்த ஆர்வத்தை இந்த ஹதீஸ் காட்டுகின்றமை.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

