'அல்லாஹ் சுவர்க்கத்தையும் நரகத்தையும் படைத்து விட்டு, ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். 'அல்லாஹ் சுவர்க்கத்தையும் நரகத்தையும் படைத்து விட்டு, ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சுவர்க்கத்துக்கு அனுப்பி சுவர்க்கத்தையும், சுவர்க்கவாசிகளுக்காக நான் தயார்செய்தவற்றையும் பார்ப்பீராக என்று கூறினான். அவர் அதனை பார்த்துவிட்டு வந்து உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக எவரும் அதன் இன்பம் பற்றி கேள்விப்பட்டால்; அதில் நுழைந்து விடவே நினைப்பர். உடனே அந்த சுவர்க்கம் வெறுக்கப்டபடக்கூடிய விடயங்களால் சூழ்ந்திருக்க கட்டளைப் பிரப்பித்தான். மீண்டும் அங்கு சென்று சுவர்க்கவாசிகளுக்கு தான் தயார்செய்தவற்றை பார்த்து வருமாறு கூறினான் அங்கு சென்று பார்த்த போது சுவர்க்கம் வெறுக்கத்தக்க விடயங்களால் சூழப்பட்டிருந்தது. அதற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக அதனுள் எவரும் நுழைய மாட்டார்களோ என நான் பயப்படுகிறேன். பின் நரகத்தையும் நரகவாதிகளுக்கு தான் தயார்ப்படுத்திவைத்திருப்பவற்றை பார்ப்பீராக என ஜிப்ரீலிடம் அல்லாஹ் கூற, அதனைச் சென்று பார்த்த போது அது அடுக்கடுக்காக இருப்பதை கண்டார்.பின் திருப்பிவந்து உனது கண்ணியத்தின் மீது ஆணையாக அதில் எவரும் நுழைய விரும்ப மாட்டார்கள். உடனே அல்லாஹ் நரகத்தை இச்சைகளால் சூழ்ந்திருக்க கட்டளைப்பிரப்பித்தான் பின் மீண்டும் அதனை பார்த்து வருமாறு அவருக்கு கட்டளையிட்டான் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸ்லாம் அவர்கள் சென்று பார்த்த போது அது இச்சைகளால் சூழப்பட்டிருந்தது.உடனே திரும்பி வந்து (இறைவா) உனது கண்ணியத்தி;ன் மீது சத்தியமாக அதனுள் நுழையாது எவறும் தப்ப மாட்டார்கள் என நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்.'
Explanation
Benefits
மறைவானவற்றையும்,அல்லாஹ்விடமிருந்தும் ; அவனின் தூதரிடமிருந்தும் வழிகாட்டல்கள் என வந்தவற்றையும் ஈமான் கொள்வது கடமை.
சுவர்கத்தின் பால் இட்டுச்செல்லும் காரணியாக இன்னல்கள் இருப்பதால் அதில் பொறுமையை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது.
நரகத்திற்கு வழிவகுக்கும் காரணியாக தடைசெய்யப்பட்டவை இருப்பதால் அவற்றிலிருந்து விலகி நடப்பதன் அவசியம். குறித்து இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது.
சுவர்க்கம் இன்னல்களாலும் நரகம் இச்சைகளாலும் சூழப்பட்டதாக இருப்பது, உலக வாழ்வின் சோதனைக்கான அடிப்படையாகும்.
சுவர்க்கத்திற்கான பாதை கடினமும் சிரமும் நிறைந்தது, அதற்கென நம்பிக்கையுடன்(ஈமானுடம்) பொறுமை மற்றும் இன்னல்களை அனுபவித்தல் என்பனவும் அவசியம். மேலும், நரகத்திற்கான பாதை இந்த உலகின் இன்பங்களாலும் ஆசைகளாலும் நிறைந்தது.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

