'நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது' அல்லது 'உங்கள் விரிப்புக்குச் செல்லும்போது' முப்பத்து மூன்று முறை 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை 'அல்ஹம்துலில்லாஹ்' (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதைவிடச் சிறந்ததாகும்' என்று சொன்னார்கள்
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது : (என் துணைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தமது கையில் ஏற்பட்ட காயம் குறித்து (தம் தந்தை) நபி (ஸல்) அவர்களிடம் முறையிடுவதற்காகச் சென்றார்கள். ஏனெனில், (போர்க் கைதிகளான) அடிமைகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்திருப்பதாக அவருக்குச் செய்தி வந்திருந்தது. ஆனால், பாத்திமா, நபி (ஸல்) அவர்களை அங்கு காணவில்லை. தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கவே, நபி அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்று விட்டிருந்தோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே நாங்கள் எழுந்திருக்கப் போனோம். அவர்கள், ''நீங்கள் இருவரும் உங்கள் இடத்திலேயே இருங்கள்' என்று சொல்லிவிட்டு, அவர்களே வந்து எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள்.
அவர்களின் பாதங்கள் என் வயிற்றில்பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணரும் அளவுக்கு (நெருக்கமாக அமர்ந்தார்கள்). அப்போது அவர்கள், ''நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? 'நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது' அல்லது 'உங்கள் விரிப்புக்குச் செல்லும்போது' முப்பத்து மூன்று முறை 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை 'அல்ஹம்துலில்லாஹ்' (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதைவிடச் சிறந்ததாகும்' என்று சொன்னார்கள்.
Explanation
Benefits
இந்த திக்ரை இரவில் தூங்கும் போது ஓத வேண்டும். ஏனெனில் ஸஹீஹ் முஸ்லிமில், முஆத் அவர்கள் ஷுஃபாவின் மூலம் அறிவிக்கும் அறிவிப்பின் வாசக்த்தில் : 'நீங்கள் இரவில் படுக்கைக்குச் செல்லும் போது.' என்று இடம்பெற்றுள்ளது.
ஒரு முஸ்லிம் இரவின் முதல் பகுதியில் இந்த திக்ரைச் சொல்ல மறந்துவிட்டு, கடைசி பகுதியில் அதை நினைவில் வைத்திருந்தால், அந்த நேரத்தில் அதைச் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. ஏனெனில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் அலி (ரழி) அவர்கள், ஸிப்பீன் இரவில் இரவின் முதல் பகுதியில் அதைச் சொல்ல மறந்துவிட்டதாகக் கூறுகிறார்கள், பின்னர் அவருக்கு ஞாபகம் வந்ததும், ஸுப்ஹுக்கு முன் அதைச் சொன்னார்கள்.
முஹல்லப் கூறுகிறார்: ஒரு நபர் தனது சொந்த வாழ்க்கையில் இந்த உலகத்தை விட மறுமையை முன்னுரிமைப்படுத்தும் நடைமுறையை கடைப் பிடிப்பது போல, அவர் தனது குடும்பத்தினருக்கும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும், அவர்களுக்கு அவ்வாறு செய்ய திறன் இருந்தால்.
இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்) குறிப்பிடுகையில் : இந்த திக்ரை வழமையாக்கிக் கொண்ட ஒருவருக்கு, களைப்பு ஏற்பட்டாலும் அதிக வேலை செய்வது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்கிறார்.
இமாம் அய்னி கூறுகிறார்: இந்த திக்ர் மிகவும் சிறந்தது என்பதற்கான ஒரு காரணம், திக்ரானது மறுமையுடனும், பணியாள் இந்த உலகத்துடனும் சம்பந்தப்பட்டதாக இருப்பதுதான். அந்த வகையில் மறுமை இந்த உலகத்தை விட சிறந்தது என்பது வெளிப்படையானது. மற்றொரு அம்சம் என்னவென்றால், இந்த திக்ருகளின் விளைவாக, வேலைக்காரனை விட அதிக வேலை செய்யக்கூடிய அளவுக்கு அவர்களுக்குள் செயல்சக்தி உருவாகுவது என்ற ஒரு விடயமும் இதில் அடங்கியிருப்பதாகும்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

