'சிறுவனே! நீ அல்லாஹ்வின் பெயரைக் கூறி, உனது வலது கரத்தால், உனக்கு முன்னால் இருப்பதை சாப்பிடு'
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
உமர் இப்னு அபீ ஸலமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மடியில் வளர்ந்து வந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (அங்கும் இங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் என்னிடம், 'சிறுவனே! நீ அல்லாஹ்வின் பெயரைக் கூறி, உனது வலது கரத்தால், உனக்கு முன்னால் இருப்பதை சாப்பிடு' என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது'.
Explanation
முதலாவது : உண்ண ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் கூறுதல்.
இரண்டாவது: வலது கையால் உண்ணுதல்.
மூன்றாவது : உணவுத் தட்டில் தனக்கு அருகில் உள்ள பகுதியிலிருந்து சாப்பிடுதல்.
Benefits
ஒருவரின் பராமரிப்பின் கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்பித்துக் கொடுத்தல் வேண்டும்
சிறார்களுக்கு கற்பித்து நெறிப்படுத்துவதில் நபியவர்களின் இங்கிதமும் தயாள குணமும் இந்த ஹதீஸில் பிரதிபளிக்கின்றமை.
உண்ணும் போது தனக்கு அருகில் உள்ளதை சாப்பிடுவது ஒழுக்கங்களில் ஒன்றாகும். ஆனால் குறிப்பிட்ட உணவு பல வகையானதாக இருப்பின் அவருக்கு விரும்பியதை எப்பகுதியிலிருந்தும் எடுத்து சாப்பிட அனுமதியுண்டு.
நபியவர்கள் கற்றுக்கொடுத்து நெறிப்படுத்திய விடயத்தை தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் பண்பு ஸஹாபாக்களிடம் காணப்பட்டமை. அதனை நாம் ' உமர் அவர்களின் கூற்றான 'அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது'. என்பதிலிருந்து கற்றுக்கொள்கிறோம்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

