HadeethEnc · 1.36.0
நாம் அல்லாஹ்வின் தூதரோடு ஸஹ்ர் செய்தோம். பின்னர் அவர்கள் தொழுகைக்காக சென்றார்கள். நான் ஸைதிடம் அதானுக்கும் ஸஹ்ர் உணவுக்குமிடையில் எவ்வளவு இடைவெளி இருந்ததென கேட்டேன். அதற்கு ஐம்பது ஆயத்துக்கள் அளவு என்றார்கள் என அனஸ் அறிவிக்கிறார்கள்
Available translations
Choose an available translation of this Hadeeth
01
Hadeeth text
ஸைத் இப்னு ஸாபித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நாம் அல்லாஹ்வின் தூதரோடு ஸஹ்ர் செய்தோம். பின்னர் அவர்கள் தொழுகைக்காக சென்றார்கள். நான் ஸைதிடம் அதானுக்கும் ஸஹ்ர் உணவுக்குமிடையில் எவ்வளவு இடைவெளி இருந்ததென கேட்டேன். அதற்கு ஐம்பது ஆயத்துக்கள் அளவு என்றார்கள் என அனஸ் அறிவிக்கிறார்கள்.
02
Explanation
நபித் தோழர்களில் சிலர் (ரழியல்லாஹு அன்{ம்;) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஸஹ்ர் உணவு உண்டார்கள் பின்னர் ஃபஜ்ர் தொழுகைக்காக எழுந்து சென்றார்கள். அப்போது அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸைத் இப்னு தாபித் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம், ஸஹுர் -ஸஹ்ர் உணவை முடிப்பதற்கும் தொழுகைக்கான அழைப்புக்கும் இடையிலான இடைவெளி எவ்வளவு இருந்தது என்று கேட்டார்கள்? அதற்கு ஸைத் இப்னு ஸாபித் (ரழி) அவர்கள் மிக நீண்ட வசனமோ அல்லது மிகச்சிறிய வசனமோ அல்லாது ஐம்பது நடுத்தரமான வசனங்களை சாதாரண வேகத்தில் ஓதக்கூடிய நேரம் என்று கூறினார்கள்.
03
Benefits
ஸஹ்ர் உணவை பஜ்ருக்கு சற்று முன்புவரை சிறிது நேரம் தாமதப்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் அது உடலுக்கு மிகவும் நன்மை பயனளிப்பதோடு முழு நாளுக்கும் அதிக நன்மையை பெற்றுத் தரக்கூடியதாக இருக்கும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் அமர்ந்து, அறிவைப் பெறுவதற்காக நபித் தோழர்களிடம் காணப்பட்ட ஆர்வம்.
நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் ஒப்புரவோடு நடந்து கொண்டமை, இதன் வெளிப்பாடாக அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டது இதற்கு சான்றாக உள்ளது.
நோன்பு நோற்பதற்கான நேரம் பஜ்ர் உதயமாகுவதுடன் ஆரம்பிக்கிறது.
'தொழுகைக்கான அழைப்புக்கும் ஸஹ்ர் உணவுக்குமிடையில் எவ்வளவு நேரம் இருந்தது' என்ற ஹதீஸின் வார்த்தையின் கருத்து ஸஹ்ர் உணவுக்கும் இகாமத்துக்கும் இடையிலான நேரம் என்பதாகும். இக்கருத்தை பின்வரும் ஹதீஸ் விபரிக்கிறது: 'அவர்கள் இருவரும் ஸஹ்ர் உணவை முடித்து தொழுகையில் நுழைவதற்கு இடையில் எவ்வளவு நேரம் இருந்தது.' என அந்த ஹதீஸில் வந்துள்ளது.
இமாம் முஹல்லப் (ரஹ்) அவர்கள்; பின்வருமாறு கூறினார்: இந்த ஹதீஸில், நேரமானது உடல் ரீதீயான செயல்களால் அளவிடப்பட்டுள்ளது. இது அரேபியர்களிடையே காணப்பட்ட பொதுவான ஒரு விடயமாகும். உதாரணமாக, அவர்கள் 'ஆடு பால் கறப்பதற்குச் சமமான நேரம், ஒட்டகத்தை அறுப்பதற்குச் சமமான நேரம்' என்று கூறினர். அந்த வகையில் ஸைத் இப்னு ஸாபித் இந்த ஹதீஸில் மேற்கண்ட எடுத்துக்காட்டுகளுக்கு நிகராக ஓதுவதன் மூலம் நேரத்தை அளவிட்டிருக்கிறார்;, காரணம் இந்த நேரம் ஓதுவதன் மூலம் வழிபடும் நேரம் என்பதால் ஆகும். அவர் செயலைத் தவிர வேறு எதையாவது கொண்டு நேரத்தை அளந்தால், உதாரணமாக: ஒரு பட்டம் அல்லது மூன்றில் ஒரு பங்கு அல்லது ஒரு மணி நேரத்தில் ஐந்தில் ஒரு பங்கு அளவு என்று கூறுவார்.
இப்னு அபு ஜம்ரா கூறினார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது உம்மத்திற்கு எது எளிதானது என்பதைப் பார்த்து அதை செய்து காட்டினார்கள். நபியவர்கள்; -ஸஹுர்- ஸஹ்ர் உணவு சாப்பிடவில்லை என்றால், அவரைப் பின்பற்றி ஸாபாக்களும் ஸஹுர் சாப்பிட மாட்டார்கள். அவ்வாறு செய்வதினால் சிலருக்கு சிரமம் ஏற்படும். அதேபோல், நபியவர்கள் நள்ளிரவில் ஸஹ்ர் உணவு சாப்பிட்டிருந்தால், தூக்கத்தில் மூழ்கியவர்களுக்கு அது சிரமமாக இருக்கும். இதனால்; ஃபஜ்ர் தொழுகை தவறப்போவதற்கு வழிவகுக்கும் அல்லது இதற்காக மிகவும் சிரமத்துடன் விழித்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

Attribution
[இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]
Categories
Share
Share hadeeth
Sharing options · 0 Total shares