افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم.
#4438[சரியானது]
HadeethEnc · 1.36.0

'நோன்பு திறப்பதை (தாமதிக்காது) அவசரப்படுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் (நலவிலே) நிலைத்திருக்கிறார்கள்

Available translations

Choose an available translation of this Hadeeth

01

Hadeeth text

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நோன்பு திறப்பதை (தாமதிக்காது) அவசரப்படுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் (நலவிலே) நிலைத்திருக்கிறார்கள்.
02

Explanation

சூரியன் மறைந்துவிட்டது என்பது உறுதியானதன் பின், மக்கள் தங்கள் நோன்பைத் துறக்க தாமதிக்காது விரைந்து செல்லும் காலமெல்லாம், அவர்கள் நலவில் இருப்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். ஏனெனில், இது நபி (ஸல்) அவர்களின் சுன்னாவைப் பின்பற்றி, அவர் நிர்ணயித்த வரம்புகளை மீறாமல் இருப்பதற்கான வழிகாட்டலாகும்.
03

Benefits

இமாம் நவாவி (ரஹ்)கூறுகிறார்: இந்த ஹதீஸ் சூரியன் மறைந்தவுடன் நோன்பை துறப்பதை ஊக்குவிக்கிறது. இந்த ஹதீஸின் பொருள் ஸுன்னாவைப் கடைப்பிடித்து வரும் காலமெல்லாம் இந்த உம்மத்தின் விவகாரங்கள் சீர்பெற்றிருப்பதுடன் தொடர்ந்தும் நன்மையை அனுபவிப்பார்கள் என்பதாகும். அத்துடன் நோன்பை துறப்பதை தாமதப்படுத்தினால் அவர்கள் ஏதோ ஒரு சீர்கேட்டில் விழப்போகிறார்கள் என்பதற்கான அறிகுறியாகும்.
ஸுன்னாவைப் பின்பற்றுவதால் மக்களிடையே நன்மை நிலைத்திருக்கும். ஸுன்னாவை உரிய முறையில் பின்பற்றாது மாற்றம் செய்யும் போது காரியங்கள் அனைத்தும் சீர் குழைந்து விடும்.
தாமதமாக நோன்பு திறக்கும் வேதக்காரர்களுக்கும் பித்அத்காரர்களுக்கும் மாற்றம் செய்தல்.
இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்) கூறினார்: நோன்பைத் திறப்பதில் தாமதம் கூடாது என்பதற்கான காரணத்தை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிது. இமாம் அல்-முஹல்லப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 'இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்னவென்றால், இரவில் ஒரு பகுதியை பகலுடன் சேர்த்து பகல் பொழுதின் நேரத்தை அதிகரிக்கக் கூடாது என்பதாகும். உண்மையில், உரிய நேரத்தில் தாமதமின்றி நோன்பைத் திறப்பது நோன்பாளிக்கு மிகவும் வசதியானது மட்டுமன்றி வணக்க வழிபாடுகளை செய்ய அவருக்கு அதிக வலிமையையும் சக்தியையும் தருகிறது. சூரிய அஸ்தமனத்தை நேரடியாக பார்ப்பதன் மூலம் அல்லது சூரியன் மறைந்ததை நேர்மையான இருவர் உறுதிப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நோன்பை திறக்க விரைய வேண்டும் என்பது அனைத்து அறிஞர்களினதும் ஏகோபித்த கருத்தாகும். அத்துடன் சூரியன் மறைந்ததை நேர்மையான ஒருவர் உறுதிப்படுத்தினாலும் நோன்பை திறக்க முடியும் என்பது பெரும்பான்மை அறிஞர்களின் கருத்தாகும்.
இப்னு-ஹஜர் ரஹ் கூறுகிறார்: எச்சரிக்கை: இன்றைய காலத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பித்அத் -புதுமை- என்னவென்றால், ரமழான் மாதத்தில், விடியற்காலையில் சுமார் இருபது நிமிடங்களுக்கு முன்பு இரண்டாவது அதான் ஒலிக்கப்படுவதும், நோன்பு நோற்க விரும்புவோருக்கு அவ்வேளை சாப்பிடுவதும் குடிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதைக் குறிக்க விளக்குகள் அனைக்கப்படுவதுமாகும். இது வணக்க வழிபாடுகளில் பேணுதலை கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் புதிதாக ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த விடயம் பற்றி சிலரே அறிந்து வைத்துள்ளனர். இவ்வாறு நேரகாலத்துடன் ஸஹ்ர் உணவை உண்ணுவதை தடுத்துக் கொள்வதானது, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சிறிது நேரம் கழித்து அதான் கூறும் நிலைக்கு வழிவகுத்தது. இதனால், அவர்கள் நோன்பு திறப்பதை தாமதப்படுத்தி, நோன்பை நோற்பதற்காக அவசரப்படும் நிலை உருவாகி விட்டது. இதனால் அவர்கள் ஸுன்னாவிற்கு முரணாக நடந்து கொள்கிறார்கள் ஆகையால் அவர்களிடையே நன்மை குறைந்து, தீமை அதிகரித்துள்ளது. எல்லாவற்றிற்கும் அல்லாஹ்வே போதுமானவன் உதவியாளன்.

Attribution

[இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]

Categories

Share

Share hadeeth

Sharing options · 0 Total shares

Share

← Back to encyclopedia
Shopping Basket

Loading...