ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அஸ்ஸலாமு அலைகும்' என்று கூறினார். நபியவர்கள் அதற்கு பதில் அளித்ததும் அவர் அமர்ந்து விட்டார். அப்போது நபியவர்கள், 'பத்து' என்று கூறினார்கள்
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
இம்ரான் இப்னு ஹுஸைன் (ரல்) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அஸ்ஸலாமு அலைகும்' என்று கூறினார். நபியவர்கள் அதற்கு பதில் அளித்ததும் அவர் அமர்ந்து விட்டார். அப்போது நபியவர்கள், 'பத்து' என்று கூறினார்கள். பின்னர் ஒரு மனிதர் வந்து, 'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹ்' என்று கூறினார். நபியவர்கள் அதற்கும் பதில் அளித்ததும் அவரும் அமர்ந்து விட்டார். அப்போது நபியவர்கள், 'இருபது' என்று கூறினார்கள். பின்னர் ஒரு மனிதர் வந்து, 'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ' என்று கூறினார். நபியவர்கள் அதற்கும் பதில் அளித்ததும் அவரும் அமர்ந்து விட்டார். அப்போது நபியவர்கள், 'முப்பது' என்று கூறினார்கள்.
Explanation
Benefits
ஸலாமின் சொற்கள் அதிகரிக்கும் போது கூலிகள் அதிகரிக்கும்.
ஸலாம் கூறுவதில் பரிபூரணமானது, 'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ' என்று கூறுவதாகும். பதில் அளிப்பதில் முழுமையான வார்த்தை, 'வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ' என்று கூறுவதாகும்.
ஸலாம் கூறுவது மற்றும் அதற்கு பதில் அளிப்பது வெவ்வேறான படித்தரங்களைக் கொண்டது. அவ்வாறே நன்மையும் வேறுபடும்.
மக்களுக்கு நன்மையைக் கற்றுக்கொடுத்தல். மேலும், மிகச் சிறந்ததை அடைந்து கொள்ள அவர்களுக்கு விழிப்பூட்டல்.
இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : முதலில் ஸலாம் கூறுபவர், 'வரஹ்மதுல்லாஹ்' என்பதையும் கூறினால், பதிலில், 'வபரகாதுஹு' என்பதையும் இணைத்துக் கூறுவது விரும்பத்தக்கதாகும். ஆனால், முதலில் கூறுபவர், 'வபரகாதுஹு' என்பதையும் இணைத்துக் கூறினால், பதிலில் மேலும் அதிகப்படுத்திக் கூறுவது அனுமதிக்கப்படுமா? அதே போன்று, முதலில் கூறுபவரும் 'வபரகாதுஹு' என்பதை விட அதிகமாகக் கூறுவது அனுமதிக்கப்படுமா? இமாம் மாலிக் அவர்கள் தமது முவத்தாவில், 'ஸலாம் வபரகாதுஹு' என்பதனுடன் நிறைவுறுகின்றது' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

