யா அல்லாஹ்! உன் திருப்தியைக் கொண்டு உனது கோபத்தை விட்டும், உன்னிடமுள்ள ஈடேற்றத்தைக் கொண்டு உன் தண்டனையை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். உன்னைக் கொண்டே, உன்னை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். நீ உன்னைப் புகழ்ந்தது போல, என்னால் உன்னைப் புகழ்ந்து முடிக்க முடியாது
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் : ஒரு நாள் இரவில் படுக்கை விரிப்பில் நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைக் காணவில்லை. அவர்களை நான் தேடியபோது எனது கை அவர்களது உட்கால்ப் பாதங்களைத் தொட்டது. அவை நட்டிவைக்கப் பட்டிருந்தன. அவர்கள் பள்ளிவாசலில் இருந்தார்கள். அவர்கள் இவ்வாறு கூறிக் கொண்டிருந்தார்கள்: யா அல்லாஹ்! உன் திருப்தியைக் கொண்டு உனது கோபத்தை விட்டும், உன்னிடமுள்ள ஈடேற்றத்தைக் கொண்டு உன் தண்டனையை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். உன்னைக் கொண்டே, உன்னை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். நீ உன்னைப் புகழ்ந்தது போல, என்னால் உன்னைப் புகழ்ந்து முடிக்க முடியாது.
Explanation
“நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்” (அதாவது பாதுகாக்குமாறு உதவி தேடுகின்றேன்) “உன் திருப்தியைக் கொண்டு உனது கோபத்தை விட்டும்” (என் மீதோ, எனது சமுதாயம் மீதோ நீ கோபப்படுவதை விட்டும்) உன்னிடமுள்ள ஈடேற்றத்தைக் கொண்டு (உனது அதிக மன்னிப்பைக் கொண்டு) உன் தண்டனையை விட்டும் “உன்னைக் கொண்டே, உன்னை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன்.” (உனது அழகு, மற்றும் கண்ணியத்தின் பண்புகளைக் கொண்டு. நீயே உன்னை விட்டும் பாதுகாப்பாய். அல்லாஹ்விடமிருந்து தப்பி ஒதுங்குவதற்கான இடம் அவனிடத்தைத் தவிர வேறில்லை). “என்னால் உன்னைப் புகழ்ந்து முடிக்க முடியாது”. (நான் எவ்வளவு முயற்சித்தாலும், உனது பேருபகாரங்களையும், அருட்கொடைகளையும் என்னால் அளவிட முடியாது என்பதால், உனக்குத் தகுதியான அளவு உன்னைப் புகழ்ந்து முடிக்கவும் இயலாது.) “நீ உன்னைப் புகழ்ந்தது போல” நீ மாத்திரமே உனக்குப் பொருத்தமான விதத்தில் உன்னைப் புகழ்ந்துள்ளாய். எனவே, யாரால் உன்னைப் புகழும் கடமையை சரிவரநிறைவேற்றமுடியும்?
Benefits
மைறக் கூறுகின்றார்கள் : நஸாஇயின் ஓர் அறிவிப்பில், 'நபயிவர்கள் இந்த துஆவை, தொழுது முடிந்து படுக்கைக்கு வந்தால் ஓதுவார்கள்' என்றும் உள்ளது.
அல்லாஹ்வை அவனது பண்புகளைக் கொண்டு புகழ்வதும், அல்குர்ஆன், ஸுன்னாவில் வந்துள்ள பெயர்களைக் கொண்டு அவனை அழைப்பதும் விரும்பத்தகதாகும்.
இது ருகூஉ மற்றும் ஸுஜூதில் இறைவனை மகத்துவப்படுத்துவதை உணர்த்துகின்றது.
அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாப்புத் தேட அனுமதியுள்ளது போன்று, அல்லாஹ்வின் பண்புகளைக் கொண்டு பாதுகாப்புத் தேடவும் அனுமதியுள்ளது.
கத்தாபீ (ரஹ்) இவ்வாறு கூறுகின்றார்கள்: இவ்வார்த்தையில் துல்லியமான ஓர் அர்த்தம் உள்ளது. அதாவது இங்கு நபியவர்கள், அல்லாஹ்வைக் கொண்டே, அவனது திருப்தியின் மூலம் கோபத்தை விட்டுப் பாதுகாக்குமாறும், அவனது மன்னிப்பின் மூலம் தண்டனையை விட்டும் பாதுகாக்குமாறும் கேட்கின்றார்கள். கோபமும், திருப்தியும் நேரெதிரான இரு அம்சங்கள். இவ்வாறு தான் மன்னிப்பும் தண்டனையும். இவ்வாறே, எதிர் இல்லாத ஒன்றாகிய 'அல்லாஹ்வை' வந்தடைந்த போது, அவனைக் கொண்டு அவனை விட்டுமே பாதுகாப்புத் தேடுகின்றார்கள். அதன் அர்த்தம் என்னவென்றால், அவனுக்கு கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய வணக்கங்களில் வரும் குறைகளை விட்டும் பாவமன்னிப்புத் தேடுவதாகும். "என்னால் உன்னைப் புகழ்ந்து முடிக்க முடியாது." என்றால், நான் அதற்கு சக்திபெறமாட்டேன் என்பதாகும்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

