யார் அமானிதத்தைக் கொண்டு சத்தியம் செய்கின்றாரோ, அவர் எம்மைச் சார்ந்தவர் அல்ல
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக புரைதா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: யார் அமானிதத்தைக் கொண்டு சத்தியம் செய்கின்றாரோ, அவர் எம்மைச் சார்ந்தவர் அல்ல.
Explanation
Benefits
அமானிதம் என்பது வணக்கவழிபாடு, பொருட்களை அமானிதமாக வைத்தல், பணம், நம்பிக்கை ஆகியவற்றை உள்ளடக்கும்.
சத்தியம் அல்லாஹ்வையோ, அவனது பெயர்கள் அல்லது பண்புகளையோ கொண்டே தவிர நிறைவேற மாட்டாது.
கத்தாபீ அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் : இது வெறுக்கப்பட்டமைக்கான காரணம், அல்லாஹ்வைக் கொண்டு, அல்லது அவனது பண்புகளைக் கொண்டு மாத்திரமே சத்தியம் செய்யுமாறு நபியவர்கள் ஏவியிருப்பதாகும். அமானிதம் அல்லாஹ்வின் ஒரு பண்பல்ல. மாறாக, அது அல்லாஹ்வின் கட்டளைகளில் ஒன்றாகும். அவனது கடமைகளிலும் ஒன்றாகும். எனவே, இச்சந்தர்ப்பத்தில் இது அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளோடு சமப்படுத்தப்படுவதால், நபியவர்கள் இதனைத் தடுத்துள்ளார்கள்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

