நிச்சயமாக ஷைத்தான் அரபுத் தீபகற்பத்தில் தொழுபவர்கள் தன்னை வணங்குவார்கள் என்பதிலிருந்து நிராசையடைந்து விட்டான். ஆனால் அவர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, பிளவை ஏற்படுத்துவதில் நம்பிக்கை இழக்கவில்லை
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதை தான் செவிமடுத்ததாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள் : நிச்சயமாக ஷைத்தான் அரபுத் தீபகற்பத்தில் தொழுபவர்கள் தன்னை வணங்குவார்கள் என்பதிலிருந்து நிராசையடைந்து விட்டான். ஆனால் அவர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, பிளவை ஏற்படுத்துவதில் நம்பிக்கை இழக்கவில்லை.
Explanation
Benefits
முஸ்லிம்களுக்கு மத்தியில் சச்சரவுகள், குழப்பங்கள், குரோதங்கள் மற்றும் யுத்தங்களை விளைவிக்க ஷைத்தான் முயற்சிக்கின்றான்.
தொழுகையின் பயன்களில் ஒன்று, அது முஸ்லிம்களுக்கு மத்தியில் உள்ள அன்பைப் பாதுகாத்து, சகோதரத்துவ பிணைப்புக்களைப் பலப்படுத்துகின்றது.
இரு கலிமாக்களுக்கும் பின்னர், தொழுகையே மார்க்கத்தின் மிக முக்கியமான அடையாளச் சின்னமாகும். இதனாலேயே, முஸ்லிம்கள், தொழுகையாளிகள் என அழைக்கப்பட்டுள்ளார்கள்.
அரபுத் தீபகற்பத்துக்கு ஏனைய நாடுகளுக்கு இல்லாத தனித்துவங்கள் உண்டு.
நபியவர்கள் "ஷைத்தான் அரபுத் தீபகற்பத்தில் தொழுபவர்கள் தன்னை வணங்குவார்கள் என்பதிலிருந்து நிராசையடைந்து விட்டான்." என்று கூறியிருக்கும் நிலையில், அரபுத் தீபகற்பத்தின் சில இடங்களில் சிலைவணக்கம் நிகழ்ந்துள்ளதே எனக் கேட்கப்பட்டால், இது சைத்தான் வெற்றிகளையும், மக்கள் கூட்டம்கூட்டமாக இஸ்லாத்தில் நுழைவதையும் கண்ட பின்னர், அவனது உள்ளத்தில் ஏற்பட்ட எண்ணத்தை எடுத்துக் கூறுவது மாத்திரம் தான். எனவே இந்த ஹதீஸ் சைத்தானின் அனுமானத்தையே கூறுகின்றது. பின்பு, அல்லாஹ்வின் அறிவுஞானத்தின் அடிப்படையில், நடைமுறையில் அதற்கு மாற்றமாக நிகழ்ந்துள்ளது.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

