''நிச்சயமாக அல்லாஹ் எல்லா விடயங்களையும் மிகவும் அழகிய முறையில் செய்ய வேணடும் என விதித்துள்ளான்
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
அபூ யஃலா ஷத்தாத் இப்னு அவ்ஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் , நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள் : ''நிச்சயமாக அல்லாஹ் எல்லா விடயங்களையும் மிகவும் அழகிய முறையில் செய்ய வேணடும் என விதித்துள்ளான். ஆகவே நீங்கள் கொலை செய்தால் அழகிய முறையில் கொல்லுங்கள். நீங்கள் ஒரு மிருகத்தை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். எனவே உங்களில் அறுக்கும் ஒருவர் தனது கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளட்டும், அறுவைப் பிராணிக்கும் ஆருதலைக் கொடுக்கட்டும்'. அறுக்கும் மிருகங்களின் கஷ்டங்களை எளிதாக்கட்டும்".
Explanation
பலிக்குப்பலி தண்டனை நிறைவேற்றும் போது குறித்த நபரை கொலை செய்வதில் இஹ்ஸானை; கடைப்பிடித்தல் என்பது: கொலைசெய்யப்படு பவரின் உயிர் மிக இலகுவான முறையில் விரைவாகவும், சுகமாகவும் பிரிவதற்கு வழிசெய்தல் என்பதைக் குறிக்கும்.
ஷரீஆ முறைப்படி அறுப்பதில் இஹ்ஸான் பேணல் என்பதன் அர்த்தம் அறுவையின் போது மிருகத்துடன் நலினமாக நடப்பதாகும். அதாவது அறுக்கும் ஆயுதத்தை கூர்மையாக்குதல், அறுவை மிருகத்தின் முன் அது பார்த்துக் கொண்டிருக்கை யில் ஆயுதத்தை கூராக்காதிருத்தல், இன்னொரு மிருகம் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் அதனை அறுக்காது இருத்தல்.
Benefits
கொலை செய்தல்,மிருகங்களை அறுத்தல் போன்றவற்றில் இஹ்ஸானைக் கடைப்பிடித்தல் ஷரீஆ அங்கீகரித்த முறையில் இருக்க வேண்டும்.
இந்த மார்க்கம் அனைத்து நலவுகளையும் உள்ளடக்கியுள்ள பரிபூரண மார்க்கமாகும், பிராணிகளுக்கு இரக்கம் காட்டுதல், அவற்றுடன் மென்மையாக நடந்து கொள்ளல் என்பனவும் இதனைச் சார்ந்ததுதான்.
மனிதனை கொலை செய்ததன் பின் சித்திரவதை செய்வது தடுக்கப்பட்டிருத்தல்.
மிருகங்களை வதைசெய்யும் எல்லா விடயங்களும் தடுக்கப்பட்டிருத்தல்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

