'நீ ஸாபித் இப்னு கைஸிடம் சென்று, 'நீங்கள் நரகவாசிகளில் ஒருவரல்லர்; மாறாக, சொர்க்க வாசிகளில் ஒருவரே' என்று சொல் என்று கூறினார்கள்
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள் : (ஒரு முறை) நபி(ஸல்லல்லலஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஸாபித் இப்னு கைஸ்(ரழி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் அவரைப் பற்றிய செய்தியை அறிந்து கொண்டு தங்களிடம் வருகிறேன். என்று சொல்லிவிட்டு ஸாபித் இப்னு கைஸ்(ரழி) அவர்களிடம் சென்றார். ஸாபித் இப்னு கைஸ்(ரழி) தம் வீட்டில் தலையைக் (கவலையுடன்) கவிழ்த்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டார். 'உங்களுக்கு என்ன ஆயிற்று? என்று அவரிடம் கேட்டதற்கு அவர், '(பெரும்) தீங்கு ஒன்று நேர்ந்துவிட்டது. நான் நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் குரலை விட என்னுடைய குரலை உயர்த்தி(ப் பேசி) வந்தேன். எனவே, என் நற்செயல்கள் வீணாகி விட்டன. நான் நரகவாசிகளில் ஒருவனாகி விட்டேன்' என்று பதிலளித்தார். உடனே, அந்த மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ஸாபித் இப்படியெல்லாம் கூறினார் என்று தெரிவித்தார். அடுத்த முறை அந்த மனிதர் (பின்வரும்) மாபெரும் நற்செய்தியுடன் திரும்பிச் சென்றார். (அதாவது அம்மனிதரிடம்) நபி(ஸல்) அவர்கள் 'நீ ஸாபித் இப்னு கைஸிடம் சென்று, 'நீங்கள் நரகவாசிகளில் ஒருவரல்லர்; மாறாக, சொர்க்க வாசிகளில் ஒருவரே' என்று சொல் என்று கூறினார்கள்.
Explanation
உடனே அந்த மனிதர் நபியவ்களிடம் வந்து அவர் கூறியதைத் தெரிவித்தார். அதற்கு நபியர்கள் ஸாபித் அவர்களிடம் உடன் திரும்பிச் சென்று அவர் நரகவாதியல்ல என நற்செய்தியை அவரிடம் கூறிவிடு எனப் பணித்தார்கள். காரணம் அவரின் சப்தம் அதிகமாக இருப்பது அவரின் இயற்கையில் அமைந்த விடயம். மேலும் அவரே அல்லாஹ்வின் தூதர் அவர்களினதும், அன்ஸரிகளினதும் பேச்சாளராகத் திகழ்ந்தார்கள்.
Benefits
தனது தேழர்கள் குறித்த நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கரிசனையும், அவர்கள் இல்லாத போது அவர்கள் பற்றி விசாரித்தமையும்.
தங்களின் அமல்கள் வீணாகிவிடுமோ என்ற ஸஹாபாக்கிளின் அச்சம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உயிரோடு இருக்கும் போது அவருடன் பேசும் போது ஒழுக்கத்துடன் பேசுதல் கடமை. அதே போன்று அவர்களின் மரணித்தின் பின்னர் நபியவர்களின் ஸுன்னாவை செவிமடுக்கும் போது சப்தத்தை குறைத்துக்கொள்ளல் அவசியமாகும்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

