'நிச்சயமாக மனித இதயங்கள் யாவும் கருணையாளனாகிய அல்லாஹ்வின் விரல்களுள் இரண்டு விரல்களுக்கிடையே ஒரு இதயம் போன்று உள்ளது. அவன் விரும்பியவாறு அந்த உள்ளங்களைப் புரட்டுகிறான்'
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'நிச்சயமாக மனித இதயங்கள் யாவும் கருணையாளனாகிய அல்லாஹ்வின் விரல்களுள் இரண்டு விரல்களுக்கிடையே ஒரு இதயம் போன்று உள்ளது. அவன் விரும்பியவாறு அந்த உள்ளங்களைப் புரட்டுகிறான்' என்று கூறிவிட்டு (அல்லாஹும்ம முஸர்ரிபல் கூலுப் ஸர்ரிப் கல்பி அலா தாஅதிக) ' உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உனக்கு கீழ்படிந்து நடப்பதின்பால் திருப்பிவிடுவாயாக!' என்று குறிப்பிட்டார்கள்.
Explanation
Benefits
ஒரு முஸ்லிம் எப்போதும் தனது இரட்சகனிடம் சத்தியம் மற்றும் நேர்வழியில் நிலைத்திருப்பதற்கான உறுதியைக் கேட்க வேண்டும்.
அல்லாஹ்வை அஞ்சி நடப்பதோடு இணையில்லா ஏகனான அவனிடமே இறுக்கமான தொடர்பை பேணுதல்.
இமாம் ஆஜுர்ரீ இவ்வாறு கூறுகின்றார்கள் : சத்தியவாதிகள் அல்லாஹ்வை, அவனே வர்ணித்தவைகளைக் கொண்டும், நபி (ஸல்) அவர்கள் வர்ணித்தவைகளைக் கொண்டும், நபித்தோழர்கள் வர்ணித்தவைகளைக் கொண்டும், வர்ணிப்பார்கள். நூதனங்களை உருவாக்காது, நபியைப் பின்பற்றிய அறிஞர்களின் போக்கு இதுவாகும். அதாவது, அஹ்லுஸ் ஸுன்னாக்கள், அல்லாஹ் தனக்கு இருப்பதாகக் கூறியுள்ள பெயர்களையும், பண்புகளையும், திரிபு படுத்தாமல், கருத்துக்களை மறுக்காமல், உருவகப் படுத்தாமல், ஒப்பாக்காமல் ஏற்றுக்கொள்வார்கள். அல்லாஹ் தன்னை விட்டும் மறுத்தவற்றை அவர்களும் மறுப்பார்கள். ஏற்றுக்கொண்டோ, மறுத்தோ வராதவைகள் பற்றி அவர்கள் மௌனித்திருப்பார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: 'அவனைப் போன்று எதுவுமில்லை. நிச்சயமாக அவனே அதிகம் கேட்பவன், மற்றும் பார்ப்பவன்.'
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

