'யார் அல்லாஹ்வின் வேதம் அல்குர்ஆனில் ஓர் எழுத்தை ஓதினால் அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும், அந்த ஒரு நன்மை பத்து மடங்காகும்
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'யார் அல்லாஹ்வின் வேதம் அல்குர்ஆனில் ஓர் எழுத்தை ஓதினால் அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும், அந்த ஒரு நன்மை பத்து மடங்காகும். அலிப், லாம், மீம் என்பது ஓரெழுத்து எனக் கூற மாட்டேன், மாறாக அதில் அலிப் (ا) ஓரெழுத்து, (ل) லாம் ஓரெழுத்து, (م) மீம் ஓரெழுத்தாகும்'.
Explanation
நபியவர்கள் இதனை பின்வருமாறு தெளிவுபடுத்துகிறார்கள். அதாவது 'நான் அலிப் லாம் மீம்' என்பதை ஓரு ஹர்ப் -எழுத்து- எனக் கூறாமாட்டேன். மாறாக அலிப் ஓர் எழுத்து, லாம் ஓர் எழுத்து, மீம் ஓர் எழுத்து, ஆகவே இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு நன்மை வீதம் மூன்று நன்மைகள் கிடைப்பதுடன் இதன் பத்து மடங்கு முப்பது ஆகும்.
Benefits
அல்குர்ஆனை ஓதுபவருக்கு ஒவ்வோர் எழுத்துக்கும் ஒரு நன்மை கிடைப்பதுடன் அதற்கு பத்துமடங்கு கூலிகளும் உண்டு.
அல்லாஹ்வின் அருளினாலும், தயாளத்தினாலும் அடியார்களுக்குக் கூலிகளைப் பன்மடங்காக்குவதன் மூலம் அவனின் அருளின் விசாலம் தெளிவாகின்றது.
ஏனைய வார்த்தைகளை விடவும் அல்குர்ஆன் பெற்றிருக்கும் சிறப்பு இங்கு சுட்டிக்காட்டப் படுவதோடு, அது அல்லாஹ்வின் வார்தை என்பதினால் அதனை ஓதுவதும் வணக்கமாகும்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

