افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم.
#6078[சரியானது]
HadeethEnc · 1.36.0

(அறிந்து கொள்ளுங்கள்) என்னைப் பொறுத்தவரை நான் (இரவில்) தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன், மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் புறக்கணித்து நடக்கிராரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்' என்று கூறினார்கள்

Available translations

Choose an available translation of this Hadeeth

01

Hadeeth text

அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்ள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் இரகசியமான வணக்க வழிபாடுகள் குறித்து வினவினார்கள்.
அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது,
அவர்களில் ஒருவர், ''நான் பெண்களைவிட்டு ஒதுங்கி யிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக்கொள்ளமாட்டேன்' என்று கூறினார்.
இன்னொருவர், ''நான் ஒரு போதும் இறைச்சி சாப்பிடமாட்டேன் ' என்று கூறினார். மூன்றாம் நபர் நான் படுக்கையில் தூங்க மாட்டேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வை புகழ்ந்து துதி செய்து விட்டு (அந்தத் தோழர்களிடம்) வந்து, ''இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொள்வதற்கு இவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது! (அறிந்து கொள்ளுங்கள்) என்னைப் பொறுத்தவரை நான் (இரவில்) தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன், மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் புறக்கணித்து நடக்கிராரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்' என்று கூறினார்கள்.
02

Explanation

நபி ﷺ அவர்களின் மனைவிகளின் வீடுகளுக்கு சில ஸஹாபாக்கள் (ரழியல்லாஹீ அன்ஹும்) வந்தார்கள். அவர்கள், நபி ﷺ அவர்கள் வீட்டுக்குள் தனிப்பட்ட நிலையில் செய்யும் இபாதத்துகளைப் பற்றி விசாரித்தார்கள். அதைப் பற்றி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டபோது, அவற்றை தாங்கள் செய்யும் இபாத்துக்களுடன் ஒப்பிட்டு தாங்கள் செய்வது மிகவும் குறைவானது எனக் கருதினார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்:
'நாம் எம்மை நபி ﷺ அவர்களுடன் ஒப்பிடும் போது மிகவும் தூரத்தில் இருக்கிறோம். நபியவர்களின் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன. அவ்வாறிருந்தும்அவர்கள் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் எம்மைப் பொறுத்தவரை எமக்கு மன்னிப்பு கிடைத்ததா இல்லையா என்பது தெரியாது ஆகையால் நாம் அதிகமாக இபாதத் செய்ய வேண்டியதுதான், அதன் மூலம் மன்னிப்பு கிடைக்கலாம் எனக் கூறினார்கள்'. பின்னர் அவர்களில் ஒருவர்:
'நான் பெண்களை மணக்கமாட்டேன்' என்று கூறினார். இன்னொருவர், ''நான் ஒரு போதும் இறைச்சி சாப்பிடமாட்டேன் ' என்று கூறினார். மற்றொருவர்; நான் படுக்கையில் தூங்க மாட்டேன் என்று கூறினார். இந்த விஷயம் நபி ﷺ அவர்களுக்கு எட்டியது. அவர் கோபமடைந்து மக்களிடம் உரையாற்றினார். அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனுக்குத் துதி செலுத்திய பின் அவர்கள் கூறினார்கள்: என்ன காரணம், சிலர் இப்படியும் அப்படியும் பேசுகிறார்கள்?! அல்லாஹ்வின் மீது உங்களைவிட அதிக பயம் கொண்டவனும், அதிக தக்வா உடையவனும் நான்தான். ஆனால் நான் இரவில் தூங்குகிறேன்—இரவு தொழுகைக்காக சக்தி பெறுவதற்குநான் நோன்பை விடுகிறேன்—நோன்புக்காக வலிமை பெறுவதற்கு
நான் பெண்களை மணக்கிறேன்.
எவன் என் வழிமுறையிலிருந்து விலகி, அதற்குப் பிறகு வேறு ஒன்றில் முழுமை இருக்கிறது என்று கருதி, என் வழியை விட்டுவிட்டு வேறு வழியைப் பின்பற்றுகிறானோ—அவன் என்னைச் சார்ந்தவன் அல்லன்'.
03

Benefits

ஸஹாபாக்கள் ரழியல்லாஹஹு அன்ஹும் நன்மையான காரியங்களை மிகவும் நேசித்தவர்களாகவும், அதில் ஆர்வம் கொண்டவர்களாகவும், நபி ﷺ அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற தீவிர விருப்பம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள்.
இந்த ஷரீஅத் -மார்க்க சட்டதிட்டங்கள்-மிகுந்த சகிப்புத்தன்மையும் எளிமையும் கொண்டது இது நபி ﷺ அவர்களின் செயல்களிலும் வழிகாட்டுதலிலும் தெளிவாகப் புலப்படுகிறது.
நபி ﷺ அவர்களைப் பின்பற்றுவதிலும், அவர்களின் உயர்ந்த வாழ்க்கை முறையை அனுசரிப்பதிலும் தான் நன்மையும் பரகத்தும் உள்ளது.
தன்னால் தாங்க முடியாத அளவிற்கு வழிபாடுகளில் தீவிரமாக ஈடுபடுவதையும் தன்னை சிரமப்படுத்திக் கொள்வதையும் தடுத்தல் இத்தகைய நடைமுறை பித்அத்வாதிகளின் பண்பாகும்.
இப்னு ஹஜர் (ரஹிமஹல்லாஹ்) கூறுகிறார்: வழிபாடுகளில் அளவுக்கு மீறிய சிரமத்தை ஏற்படுத்திக் கொள்வது, இறுதியில் அதிலிருந்து முழுமையாகச் சலிப்பை ஏற்படுத்தி, வழிபாட்டின் அடிப்படையே கைவிடப்படும் நிலைக்கு இட்டுச் செல்லும். அதேபோல், வெறும் கட்டாயக் கடமைகளில் மட்டும் தன்னைச் சுருக்கிக் கொண்டு, நஃபிலான –உபரியான- வழிபாடுகளை விட்டு விடுவது சோம்பேறித்தனத்தை விரும்பச் செய்து, வழிபாட்டில் ஆர்வமின்மையை உருவாக்கும். ஆகவே, சிறந்த வழி நடுநிலையே ஆகும்.
இதில் பெரியோர் (முன்னோர்கள், அறிஞர்கள்) அவர்களின் நிலைமைகளையும் வாழ்க்கை முறைகளையும் ஆராய்ந்து, அவர்களின் செயல்களை முன்மாதிரியாகக் கொண்டு நடப்பது சிறப்பானது என்பதை உணர்த்துகிறது. மேலும், அந்த விவரங்களை ஆண்கள் மூலம் அறிய முடியாத சூழலில், பெண்கள் மூலம் அறிந்து கொள்ளுவதும் அனுமதிக்கப்பட்டதாகும்.
இதில் அறிவுரைகள் வழங்குதல், அறிவியல் விஷயங்களை எடுத்துரைத்தல், அடியார்களுக்கான சட்டதிட்டங்களை தெளிவுபடுத்தல், மேலும் ஆர்வத்துடன் வணக்கவழிபாடுகளில் தன்னை வருத்திக் கொண்டு ஈடுபடுவோர்களின் சந்தேகங்களை நீக்குதல் ஆகியவை உள்ளடங்கியுள்ளன.
வழிபாடுகளில் மென்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அதே நேரத்தில் கட்டாய வணக்க வழிபாடுகளையும் நப்லான –உபரியான- வணக்க வழிபாடுகளையும் பேணி நடந்து கொள்ளுதல் வேண்டும் என்றும் இந்த ஹதீஸ் குறிப்பிடுவதோடு பிறருக்கு அவர் மீது உள்ள உரிமைகளும் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும் என்றும் பிரஸ்தாபிக்கிறது.
இந்த ஹதீஸில் திருமணத்தின் சிறப்பும் அதற்கான ஊக்குவிப்பும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருத்தல்.

Attribution

[இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]

Categories

Share

Share hadeeth

Sharing options · 0 Total shares

Share

← Back to encyclopedia
Shopping Basket

Loading...