افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم.
#58067[சரியானது]
HadeethEnc · 1.36.0

எந்தப் பெண்ணாவது தனது பொறுப்புதாரிகளின் அனுமதியின்றி திருமணம் செய்தால், அவளது திருமணம் செல்லாது, செல்லாது, செல்லாது. அவன் அவளுடன் உறவு கொண்டிருந்தால், அதனால் மஹர் அவளுக்குரியதாகிவிடும். அவர்கள் (பொறுப்புதாரிகள்) முரண்பட்டுக் கொண்டால், பொறுப்புதாரி அற்றவர்களுக்கு ஆட்சியாளரே பொறுப்புதாரியாவார்

Available translations

Choose an available translation of this Hadeeth

01

Hadeeth text

நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக, முஃமின்களின் தாயார், ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள் : எந்தப் பெண்ணாவது தனது பொறுப்புதாரிகளின் அனுமதியின்றி திருமணம் செய்தால், அவளது திருமணம் செல்லாது, செல்லாது, செல்லாது. அவன் அவளுடன் உறவு கொண்டிருந்தால், அதனால் மஹர் அவளுக்குரியதாகிவிடும். அவர்கள் (பொறுப்புதாரிகள்) முரண்பட்டுக் கொண்டால், பொறுப்புதாரி அற்றவர்களுக்கு ஆட்சியாளரே பொறுப்புதாரியாவார்.
02

Explanation

ஒரு பெண் தனது பொறுப்புதாரிகளின் அனுமதி இன்றி தானாகவே திருமணம் செய்து கொள்வதை நபியவர்கள் எச்சரித்து, அது செல்லுபடியற்றது என்று மூன்று தடவைகள் கூறினார்கள். அதாவது, அவ்வாறான திருமணம், நடக்காத ஒரு திருமணத்தை போன்று என்பதை உணர்த்துகின்றார்கள்.

திருமணம் செய்து கொண்டவன், அவளது பொறுப்புதாரிகளின் அனுமதி இன்றி அவளோடு உறவு கொண்டிருந்தால், அவளது மர்மஸ்தானத்தில் உறவு கொண்ட காரணத்தினால் மஹர் முழுவதும் அவளுக்கு வழங்கப்படும்.

திருமணத்திற்கு பொறுப்பாக வருவதில் சம அந்தஸ்தில் உள்ள பலர் முரண்பட்டுக் கொண்டால் அவர்களின் ஒப்பந்தத்திற்கு யார் முந்திக் கொள்கின்றாரோ, அவரே தகுதியானவர். ஆனால் அவர் அவளுக்கு நலவு நாடுபவராக இருக்க வேண்டும். ஒரு பொறுப்புதாரி பெண்ணுக்கு திருமணம் செய்து கொடுக்காமல் தவிர்ந்து வந்தால், அவள் பொறுப்புதாரி அற்றவளாகக் கொள்ளப்பட்டு, நாட்டுத் தலைவரோ அல்லது அவருக்குப் பதிலாக உள்ள நீதிபதிகள் போன்றோரோ பொறுப்புதாரி ஆகிவிடுவார்கள். அவ்வாறில்லாமல் பொறுப்புதாரி ஒருவர் இருக்கும் போது நாட்டுத் தலைவர் வலியாக வர முடியாது.
03

Benefits

திருமணம் செல்லுபடியாக வலி (பொறுப்புதாரி) இருப்பது நிபந்தனையாகும். நபித்தோழர்கள் யாருமே இதற்கு மாற்று கருத்துத் தெரிவிக்க வில்லை என இப்னுல் முன்திர் (ரஹ்) கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்லுபடியற்ற திருமணத்தில், கணவன் உறவு கொண்டிருந்தால், பெண்ணுக்கு மஹர் கொடுக்கப்பட வேண்டும்.
பொறுப்புதாரிகள் அற்ற பெண்களுக்கு ஆட்சியாளரே பொறுப்பாக இருப்பார். அதாவது, ஒன்றில் உண்மையிலேயே பொறுப்புதாரி இல்லாமல் இருக்கலாம். அல்லது, இருந்தும் திருமணம் முடித்துக் கொடுக்காமல் இருக்கும் ஒருவராக இருக்கலாம்.
பொறுப்பதாரி இல்லாத போதோ அல்லது அவர் விலகிக் கொள்ளும் போதோ ஆட்சியாளரே பொறுப்புதாரி ஆக இருப்பார். இதுபோன்ற விவகாரங்களில் அவருக்குப் பதிலாக நீதிபதியே செயலாற்றுவதால் அவரும் பொறுப்புதாரியாக வரலாம்.
பெண்ணுக்கு திருமணம் முடித்துக் கொடுப்பதில் பொறுப்புதாரி இருக்க வேண்டும் என்பதன் அர்த்தம், அவளுக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை என்பதல்ல; மாறாக, அவளுக்கும் உரிமை உள்ளது. அவளது அனுமதியின்றி பொறுப்புதாரியால் அவளைத் திருமணம் செய்து கொடுக்க முடியாது.
செல்லுபடியாகும் திருமணத்தின் நிபந்தனைகள்: 1. சைக்கினையாக அல்லது பெயரைக் குறித்து அல்லது வர்ணனைகளைக் கூறி அல்லது வேறு ஏதாவது ஒரு விதத்தில் கணவன், மனைவி இருவரும் அறியப்பட்டிருத்தல். 2. ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொள்ளல் 3. பெண் சார்பாக பொறுப்புதாரி ஒப்பந்தத்தை மேற்கொள்ளல். 4. திருமண ஒப்பந்தத்திற்கு சாட்சியம் வைத்தல்.
திருமண ஒப்பந்தம் செய்யும் பொறுப்புதாரியின் நிபந்தனைகள்: 1. புத்திசுயாதீனம் 2. ஆணாக இருத்தல் 3. 15 வயதை எட்டுவதன் மூலம் அல்லது விந்து வெளியேற்றத்தின் மூலம் பருவ வயதை அடைந்திருத்தல் 4. மார்க்கம் ஒன்றுபடல். எனவே ஒரு காபிர் ஒரு முஸ்லிமுக்கோ அல்லது ஒரு முஸ்லிம் ஒரு காபிருக்கோ பொறுப்புதாரியாக முடியாது. 5. தீயவராக இல்லாமல் நீதமானவராக இருத்தல். யாரது திருமணத்தை பொறுப்பேற்றுள்ளாரோ அவரது நலவுகளைப் பற்றி சிந்திக்கும் ஒருவராக இருந்தால் போதுமானது. 6.விவரம் உள்ளவராக இருத்தல். அதாவது தகுதியானவர்களையும் திருமணத்தின் நலன்களையும் அறிந்தவர்களாக இருத்தல்.
பெண்ணை திருமணம் செய்து வைக்கும் பொறுப்புதாரிகளுக்கான ஒரு வரிசை முறை சட்ட அறிஞர்களிடம் உண்டு. எனவே நெருங்கிய ஒரு பொறுப்புதாரியை விட்டுச் செல்வதாக இருந்தால், ஒன்றில் அவர் இல்லாமல் இருக்க வேண்டும், அல்லது அவருக்குரிய நிபந்தனைகள் பரிபூரணம் அடைந்திராமல் இருக்க வேண்டும். பெண்ணின் முதல் பொறுப்புதாரி அவளது தந்தை ஆகும். பின்பு அவனது விடயத்தில் அவரால் வஸியத்து செய்யப்பட்டவராகும். பின்பு தந்தை வழிபாட்டன் ஆகும், அல்லது அதற்கு மேல் உள்ள பாட்டனர்கள் ஆகும். பின்பு அப்பெண்ணின் மகன் அல்லது அவருடைய மகன்களாகும். இவ்வாறே பல தலைமுறைகள் செல்லலாம். பின்பு அவளது கூடப்பிறந்த சகோதரர்களாகும். பின்பு தந்தை வழிச் சகோதரர்கள் ஆகும். பின்பு அவர்களின் ஆண் பிள்ளைகளாகும். பின்பு அவளது தந்தையின் கூடப்பிறந்த சகோதரர்கள் ஆகும். பின்பு அவரது தந்தை வழிச் சகோதரர்கள் ஆகும். பின்பு அவர்களது ஆண் பிள்ளைகள் ஆகும். பின்பு அனந்தரச் சொத்தில் வருவது போன்று அடுத்தடுத்து நெருங்கிய ஆண் உறவுகள் வருவார்கள். முஸ்லிம் ஆட்சியாளரும், அவருக்குப் பதிலாக வரும் நீதிபதி போன்றோரும் பொறுப்புதாரிகள் இல்லாத பெண்களுக்குப் பொறுப்புதாரிகளாக வருவார்கள்.

Attribution

[இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்]

Categories

Share

Share hadeeth

Sharing options · 0 Total shares

Share

← Back to encyclopedia
Shopping Basket

Loading...