HadeethEnc · 1.36.0
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வாசனை வழங்கப்பட்டால் அதனை மறுக்காது ஏற்றுக்கொள்வார்கள்
Available translations
Choose an available translation of this Hadeeth
01
Hadeeth text
அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வாசனை வழங்கப்பட்டால் அதனை மறுக்காது ஏற்றுக்கொள்வார்கள்.
02
Explanation
வாசைன திரவியங்கள் வழங்கப்பட்டால் அதனை மறுக்காது ஏற்றுக்கொள்வது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிமுறைகளில் ஒன்றாக இருந்தது. ஏனெனில் அது சுமந்து செல்வதற்கு எளிதாக உள்ளது, மற்றும் நறுமண மிக்கதாகவும் காணப்படுகிறது.
03
Benefits
நறுமணப் பொருட்கள் வழங்கப்படும் போது அதனை ஏற்பது விரும்பத்தக்கதாகும். ஏனெனில் அதனைச் சுமந்து செல்லச் செலவு கிடையாது, அதனை ஏற்பதால் கொடுத்தவர் சொல்லிக் காட்டும் அளவு முக்கியத்துவமும் கிடையாது.
யார் நறுமணத்தை பரிசாக அளிக்கிறாரோ அதனை மறுக்காது ஏற்றுக்கொள்வதில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பூரண நற்குணம் தெளிவாகிறது.
நறுமணத்தைப் பயன்படுத்த ஆர்வமூட்டுதல்.
யார் நறுமணத்தை பரிசாக அளிக்கிறாரோ அதனை மறுக்காது ஏற்றுக்கொள்வதில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பூரண நற்குணம் தெளிவாகிறது.
நறுமணத்தைப் பயன்படுத்த ஆர்வமூட்டுதல்.
Attribution
[இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்]
Categories
Share
Share hadeeth
Sharing options · 0 Total shares

