افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم.
#5508[சரியானது]
HadeethEnc · 1.36.0

'உங்களுக்கப் பின்னர் நான் நான்கு வார்த்தைகளை, மூன்று தடவைகள் கூறினேன். அவற்றை நீங்கள் இன்றுமுழுவதும் கூறியவற்றுடன் நிறுத்துப் பார்த்தால், அவற்றின் நிறையே அதிகமாக இருக்கும்

Available translations

Choose an available translation of this Hadeeth

01

Hadeeth text

உம்முல் முஃமினீன், ஜுவைரிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஸுபஹ் தொழுகைக்குப் பின்னர் காலையில் நபி (ஸல்) அவர்கள் அவர்களிடமிருந்த வெளிப்பட்டுச் சென்றார்கள். அன்னையர் அவர்கள் தமது தொழுமிடத்திலேயே இருந்துகொண்டிருந்தார்கள். பின்பு ழுஹா நேரம் நுழைந்த பின்னர் நபியவர்கள் திரும்பி வந்த போது, அன்னையர் அவர்கள் அமர்ந்து கொண்டே இருந்தார்கள். அப்போது நபியவர்கள், 'நான் உங்களை விட்டுச் சென்ற அதே
நிலையில் தானா தற்போதும் இருக்கின்றீர்கள்? என்று கேட்டதற்கு, அவர்கள் 'ஆம்' என்றார்கள். அப்போது நபியவர்கள், இவ்வாறு கூறினார்கள். : 'உங்களுக்கப் பின்னர் நான் நான்கு வார்த்தைகளை, மூன்று தடவைகள் கூறினேன். அவற்றை நீங்கள் இன்றுமுழுவதும் கூறியவற்றுடன் நிறுத்துப் பார்த்தால், அவற்றின் நிறையே அதிகமாக இருக்கும்.
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ என்பவையே அவையாகும்
(பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவனது திருப்தியின் அளவுக்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்.)
02

Explanation

நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியாகிய, உம்முல் முஃமினீன் ஜுவைரிய்யா (ரலி) அவர்களிடமிருந்து, ஸுபஹ் தொழுத பின்னர் காலைநேரத்தில் வெளிப்பட்டார்கள். அவர்கள் தொடர்ந்தும் தமது தொழுமிடத்தில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். பின்பு பகல் பொழுதை அடைந்த பின்னர், ழுஹாவுடைய நேரத்தில் நபியவர்கள் திரும்பி வந்தார்கள். அப்போதும் ஜுவைரிய்யா அவர்கள் அதே இடத்தில் அமர்ந்துகொண்டே இருந்தார்கள். அப்போது நபியவர்கள், 'நான் உங்களை விட்டுச் சென்ற அதே நிலையில் தானா தற்போதும் இருக்கின்றீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் 'ஆம்' என்றார்கள். அதற்கு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : 'உங்களுக்கப் பின்னர் நான் நான்கு வார்த்தைகளை, மூன்று தடவைகள் மடக்கிக் கூறினேன். நன்மைகள் அடிப்படையில், நான் கூறியதை, நீங்கள் அமர்ந்திருந்த இந்த முழுநேரமும் கூறியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும் அவற்றை விட அதன் நன்மையே அதிகமாக இருக்கும். அல்லாஹ்வுடைய படைப்புகளின் (அவனால் மாத்திரமே எண்ணமுடியுமான) எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும் (அதாவது, தன்னுடைய அடியார்களில் தாந் பொருந்திக் கொண்டவர்களை பொருந்திக்கொள்ளச் செய்யும் அளவு. இது எம்மால் புரிந்துகொள்ளமுடியாத ஒன்றாகும்), அவனது (பிரமாண்டமான, பாரிய படைப்பாகிய) அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் (அல்லாஹ்வின் சொற்கள் அளவிட முடியாதவை, தீர்ந்து போகாதவை) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் என (அவன் அனைத்துக் குறைகளையும் விட்டுத் தூயவன் எனத்) துதிக்கிறேன். அளவிட முடியாதவை என்பது மேற்கூறிய மூன்று வகைகளையும் சாரும். அவனுடைய சொற்களின் எண்ணிக்கை மகத்துவத்திலும், பண்பிலும், எண்ணிக்கையிலும் அளவிட முடியாதது. ஆனாலும் இங்கு நாடப்படுவது எண்ணிக்கையை அதிகப்படுத்திக்காட்டுவதாகும். ஏனெனில், இங்கு முதலில் எண்ணி முடிக்க முடியுமான, படைப்புக்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. பின்பு அதைவிட மகத்தான ஒன்றை நோக்கிச் செல்லப்பட்டுள்ளது. அதுவே, அவன் உவக்கும் அளவு என்று கூறப்பட்டுள்ளது. பின்பு, படைப்புக்களிலேயே மிகப் பிரமாண்டமான அர்ஷின் எடையளவு கூறப்பட்டுள்ளது. முதலாவது, எண்ணிக்கை மற்றும் அளவீட்டுக்கு உரியது. இரண்டாவது, விதம் மற்றும் தன்மைக்கு உரியது. மூன்றாவது, பாரம் மற்றும் எடைக்கு உரியது.
03

Benefits

இந்த வார்த்தைகளின் சிறப்பைத் தெளிவுபடுத்தல். மேலும், இவற்றைக் கூற ஆர்வமூட்டல்.
திக்ர்கள் ஏற்றத்தாழ்வு கொண்டவை. அவற்றில் சில, வேறு சிலவற்றை விடச் சிறப்புக்குரியவை.
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، عَدَدَ خَلْقِهِ என்ற வார்த்தை பற்றி இமாம் நவவி இவ்வாறு கூறுகின்றார்கள் : இங்கு நாடப்படுவது எண்ணிக்கையை அதிகப்படுத்திக் காட்டுவதாகும். ஏனெனில், இங்கு முதலில் எண்ணி முடிக்க முடியுமான, படைப்புக்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. பின்பு அர்ஷின் எடை கூறப்பட்டுள்ளது. பின்பு அதைவிட மகத்தான ஒன்றை நோக்கிச் சொல்லப்பட்டுள்ளது. அதுவே, இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதாவது, இதை எவ்வாறு மட்டிடமுடியாதோ, அவ்வாறே அதையும் எண்ணி முடிக்க முடியாது.
இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : திக்ர் செய்பவர் இந்த வார்த்தையைக் கூறும் போது அதில் கூறப்பட்டுள்ள எண்ணிக்கைகளின் விளைவாக அவரது உள்ளத்தில் ஏற்படும் இறைவன் பற்றிய அறிவு, அவனைத் தூய்மைப்படுத்தல், மகத்துவப்படுத்தல் போன்றன, 'ஸுப்ஹானல்லாஹ்' என்று மாத்திரம் ஒருவர் கூறுவதை விட மகத்தானதாகும்.
குறைவான சொற்களைக் கொண்டிருப்பினும், அதிக நன்மைகளையும், சிறப்புக்களையும் பெற்றுத் தரும் 'ஜவாமிஉல் கலிம்' (எனப்படும் சொற்சுருக்க, பொருட்பெருக்க) வார்த்தைகளின் சிறப்பை உணர்த்தல்.

Attribution

[இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

Categories

Share

Share hadeeth

Sharing options · 0 Total shares

Share

← Back to encyclopedia
Shopping Basket

Loading...