ஆரோக்கியமும் ஓய்வும் மக்களில் அதிகமானோர் அலட்சியமாக இருக்கும் இரு அருட்கொடைகளாகும்
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : ஆரோக்கியமும் ஓய்வும் மக்களில் அதிகமானோர் அலட்சியமாக இருக்கும் இரு அருட்கொடைகளாகும்.
Explanation
ஒரு மனிதனுக்கு ஆரோக்கியமும் ஓய்வு நேரமும் கிடைத்தும், அல்லாஹ்வை வழிபடுவதில் சோம்பல் காட்டினால், அவன் உண்மையான நஷ்டவாளியாகிறான். இத்தகைய நிலை பெரும்பாலான மக்களிடம் காணப்படுகிறது.
ஆனால், ஒருவர் தனது ஓய்வு நேரத்தையும் ஆரோக்கியத்தையும் அல்லாஹ்வின் வழிபாடு மற்றும் நன்மையான செயல்களில் பயன்படுத்தினால், அவன் வெற்றியாளன் ஆவான்.
இந்த உலகம் மறுமைக்கான பயிர் நிலம் போன்றது. இங்கு நாம் செய்யும் நன்மைகளின் பலன் மறுமையில் கிடைக்கும்.
Benefits
இப்னு அல்-காஸின் (رحمه الله) அவர்கள் கூறுகின்றார் : நிஃமத் (அருள்) என்றால், மனிதன் அதனால் இன்பம் அடைந்து மகிழ்வது. அல்கப்ன் (நஷ்டம்) என்றால், அதிக விலைக்கு வாங்குவது அல்லது சரியான மதிப்பிற்கு அல்லாது விற்பதை குறிக்கும். ஒருவன் உடல் ஆரோக்கியமாகவும், வேலைச்சுமைகள் இல்லாமல் ஓய்வாகவும் இருந்தும், தனது மறுமைக்கான நலன்களில் முயற்சி செய்யாது இருந்தால், அவன் வணிகத்தில் நஷ்டம் அடைந்தவனைப் போன்றவன் ஆவான்.
ஆரோக்கியமும் ஓய்வு நேரமும் இருக்கும் போதே, அவை இழக்கப்படுவதற்கு முன், அவற்றை அல்லாஹ்வை நெருங்குதல், நற்செயல்கள் புரிதல் போன்ற விடயங்களில் பயன்படுத்துவதில் ஆர்வம் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் வழங்கிய அருள்களுக்கு நன்றி செலுத்துவது, அவற்றை அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு ஏற்ப பயன்படுத்துவதிலேயே தங்கியுள்ளது.
காழி இயாழ் மற்றும் அபூபக்கர் இப்னுல்அரபி (رحمهما الله) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய முதல் அருள் எது என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. சிலர்: ஈமான் சிலர்: வாழ்க்கை சிலர்: ஆரோக்கியம் என்று கூறுகின்றனர். ஆனால், ஈமான் தான் மிக முக்கியமான அருள். ஏனெனில், வாழ்க்கையும் ஆரோக்கியமும் உலகியல் அருள்கள்; அவை ஈமானுடன் சேர்ந்தால்தான் உண்மையான அருள்களாகும். ஈமான் இருந்தும், மனம் தூண்டும் தீய ஆசைகளுக்கு அடிமையாகி, சோம்பலில் மூழ்கி, இறைவனின் வரையரைகளைப் பேணாமல், வணக்க வழிபாடுகளில் ஈடுபடாது அவற்றைக் கைவிட்டால், அவன் நஷ்டமடைந்தவனாகிறான். மேலும், ஓய்வாக இருப்பவனுக்கு எந்த காரணமும் இல்லை. மாறாக வேளைப்பளு உள்ளவருக்கு சில சமயம் காரணம் இருக்கலாம். இவனின் காரணம் -நியாயம்- ஏற்றுக்கொள்ளப்படலாம். ஆனால், வெட்டியாக இருப்பவனின் காரணம் ஏற்றுக் கொள்ளப்படாது அவனுக்கு எதிராக குற்ற ஆதாரம் நிலைநிறுத்தப்படும்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

