'ஆதமுடைய மகன் நிரப்பக் கூடிய பைகளில் மிகவும் கெட்டது அவனின் வயிறாகும். ஆதமுடைய மகனுக்கு தனது முதுகெலும்பை நிமிர்த்திக் கொள்ளும் அளவு உணவே போதுமானது. அதுவும் அவனுக்கு போதாது என்றால் தன் வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும் மற்றொரு பகுதியை தண்ணீருக்கும் மற்றொரு பகுதியை அவன் சீராக மூச்சு விடுவதற்கும் ஆக்கிக் கொள்ளட்டும்'
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
மிக்தாம் இப்னு மஃதீ கரிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் : 'ஆதமுடைய மகன் நிரப்பக் கூடிய பைகளில் மிகவும் கெட்டது அவனின் வயிறாகும். ஆதமுடைய மகனுக்கு தனது முதுகெலும்பை நிமிர்த்திக் கொள்ளும் அளவு உணவே போதுமானது. அதுவும் அவனுக்கு போதாது என்றால் தன் வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும் மற்றொரு பகுதியை தண்ணீருக்கும் மற்றொரு பகுதியை அவன் சீராக மூச்சு விடுவதற்கும் ஆக்கிக் கொள்ளட்டும்'.
Explanation
Benefits
உண்பதின் நோக்கம் உடல் ஆரோக்கியத்தையும், வலிமையையும் பாதுகாப்பதாகும். இதில்தான் வாழ்க்கையின் சீர்மை தங்கியுள்ளது.
வயிறு புடைக்க(நிறைய) உண்பதில் உடல்ரீதியானதும் மார்க்கரீதியானதுமான பாதிப்புகள் உண்டு. உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : வயிறு நிறைய சாப்பிடுவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது உடலுக்கு கேடையும், தொழுகையில் சோம்பலையும் ஏற்படுத்தும்.
உண்பதை பொறுத்தவரை சட்டரீதியாக கட்டாயமானது,(வாஜிப்) அனுமதியளிக்கப்பட்டது (ஜாஇஸ்), (மக்ரூஹ்) வெறுக்கத்தக்கது 'ஹராம்'; தடைசெய்யப்பட்டது முஸ்தஹப் விரும்பத்தக்கது என ஐந்தாக வகுக்க முடியும். உயிரைப் பாதுகாக்கும் நிலையில் அமைந்தவை அதாவது உண்ணுவதை தவிர்த்தால் உயிராபத்து ஏற்படும் என்ற நிலை காணப்படுமாயின் அவ்வேளை உண்பது கட்டாயமாகும். தேவையான அளவை விட சிறிது அதிகமாக உண்பது இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதால் இது அனுமதிக்கப்பட்டது. தேவைக்கு மேலதிகமாக உண்பதால் பாதிப்பு ஏற்படும் என பயப்படத்தக்க நிலையில் உள்ளவை இது மக்ரூஹ் ஆகும். உண்பதால் தெளிவாக பாதிப்பு ஏற்படும் என்றிருந்தால் அது ஹராமாகும். அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்கு தேவையான அளவு உண்ணுதல் முஸ்தஹப்பாகும். இதனையே ஹதீஸில் சுருக்கமாக முன்று படித்தரங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாவது. வயிறு நிறை உண்ணுதல். இரண்டாது : தனது முதுகெழும்பை நிமிர்த்துகொள்ளும் அளவுக்குத் தேவையான சில கவலங்களை உண்ணுதல் மூன்றாவது : வயிற்றை மூன்றாக பிரித்து உணவுக்கும் தண்ணீருக்கும் சுவாசிக்கவும் ஒவ்வொரு பகுதியை ஏற்படுத்திக்கொள்ளுதல். இவை அனைத்திற்கும் உண்ணும் உணவு ஹலாலாக இருப்பது அவசியம்.
இந்த ஹதீஸ் மருத்துவத்துறை சார்ந்த பிரதான அடிப்படை ஒன்றை உள்ளடக்கியுள்ளது. மருத்துவ அறிவியலானது மூன்று பிரதான அடிப்படைகளைக் கொண்டுள்ளது அவையாவன: உடல்திரனை பாதுகாத்தல், உணவுமுறை கட்டுப்பாடு, மற்றும் கழிவுவெளியேற்றம் ஆகியவைகளாகும். ஹதீஸ் அவற்றில் முதல் இரண்டையும் உள்ளடக்கியது, இது குறித்த அல்லாஹ்வின் கூற்று பின்வருமாறு: 'மேலும் உண்ணுங்கள், பருகுங்கள், ஆனால் வீண்விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக, அவன் வீண்விரயம் செய்வோரை விரும்புவதில்லை.' (அல்-அஃராப்: 31)
மனிதனின் மார்க்க மற்றும் உலக நலன்களை இஸ்லாமிய ஷரீஆ உள்ளடக்கியிருப்பதால் அதன் முழுமைத்துவம் எடுத்துக்காட்டப்பட்டிருத்தல்.
ஷரிஆ கலைகளுள்; மருத்துவக் கொள்கைகளும் அதன் பல்வேறு வகைகளும் ஒன்றாகும், அவை தேன் மற்றும் கருஞ்சீரகம் பற்றிய அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஷரியாவின் தீர்ப்புகள் யாவும் உயர் இலக்குகளையும் நுட்பங்களையும்; கொண்டிருப்பதோடு தீங்குகளைத் தடுப்பதையும் நலன்களை அடைவதையும் அடிப்படையாகக் கொண்டவை.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

