HadeethEnc · 1.36.0
'லப்பைக், அல்லாஹும்ம லப்பைக். லப்பைக், லா ஷரீக்க லக லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஃமத்த லக, வல்முல்க்க லா ஷரீக்க லக்'
Available translations
Choose an available translation of this Hadeeth
01
Hadeeth text
அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள் : 'லப்பைக், அல்லாஹும்ம லப்பைக். லப்பைக், லா ஷரீக்க லக லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஃமத்த லக, வல்முல்க்க லா ஷரீக்க லக்' என்பதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் 'தல்பியா' ஆகும்.
(இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! உனக்கு இணை துணை கிடையாது. எல்லாப் புகழும் அருட் கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையானக –நிகர்- யாருமில்லை).
அப்துல்லாஹ் இப்னு உமர் - ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்; -
لَبَّيْكَ لَبَّيْكَ، وَسَعْدَيْكَ، وَالْخَيْرُ بِيَدَيْكَ، لَبَّيْكَ وَالرَّغْبَاءُ إِلَيْكَ وَالْعَمَلُ.
'லெப்பைக்க லெப்பைக்க வஸஃதைக்க வல்கைய்ரு பியதைகக்க,லெப்க்க வர்ரஃபாஉ இலைக்க வல்அமலு' எனும் வாசகத்தை மேலதிகமாக கூறுபவர்களாக இருந்தார்கள்.
'யா அல்லாஹ் நான் உனது அழைப்பை ஏற்று வந்துவிட்டேன் மேலும் உன் ; அழைப்புக்கு நான் பதிலளித்தேன். உன்னிடம்; நல்வாழ்வைத் தேடுகிறேன்;.(உனக்கு கட்டுப்பட்டு வழிபடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்;) எல்லா நன்மைகளும் உன் கைகளில் உள்ளன. எனது எல்லா எதிர்பார்புகளும், ஆசைகளும் மற்றும் செயற்பாடும் உன்னை நோக்கியே உள்ளது.
02
Explanation
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹஜ் அல்லது உம்ரா கிரியையை செய்ய நுழைந்து விட்டால் பின்வருமாறு தல்பியா கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்: (لبيك اللهم لبيك) (லெப்பக்கல்லாஹும்;ம லெப்பைக் (கருத்து விளக்கம்) : யா அல்லாஹ்! நேர்மை, ஏகத்துவம் மற்றும் ஹஜ் போன்றவற்றில் உனது அழைப்பினை ஏற்று இதோ நாம் வந்து விட்டோம்;.
(لبيك لا شريك لك لبيك) லெப்பைக் லா ஷரீக லக லெப்பைக் (கருத்து விளக்கம்) ஏனென்றால், நீ மட்டுமே வணக்கத்திற்கு மிகவும் தகுதியானவன்;. உனது இரட்சித்தல் விவகாரத்திலும் மற்றும் வணக்கத்திற்கு தகுதியானவன் என்ற விடயத்திலும், மற்றும் உன் பெயர்கள் பண்புகளிலும் உனக்கு நிகரானவர் எவரும்; இல்லை. (إن الحمد) (இன்னல் ஹம்த) உண்மையில், பாராட்டும், நன்றியும்;, புகழும் உனக்குரியது. (والنعمة) (வன்னிஃமத) அருள்கள் யாவும் உன்னிடமிருந்தே வருகின்றன, நீயே அவற்றை வழங்குகிறாய். (لك) (லக) இவை யாவும் எல்லா நிலைகளிலும்; உனக்காகவே செலுத்தப் படும். (والملك) (வல் முல்க்) ஆட்சி அதிகாரமும் உன்னுடையது. (لا شريك لك) (லாஷரீகலக) உனக்கு அதில் எந்த துணையும் இல்லை. எனவே, இவை அனைத்தும் உனக்காக மட்டுமே செலுத்தப்படும். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் இந்த தல்பியாவில் பின்வரும் வார்த்தைகளைச் சேர்த்துக் கூறுபவர்களாக இருந்தார்கள். (لبيك لبيك وسعديك) லெப்பைக்க லெப்பைக்க வஸஃதைக்க (உன் அழைப்புக்கு நான் பதிலளிக்கிறேன், உன் அழைப்புக்கு நான் மீண்டும் மீண்டும் பதிலளிக்கிறேன், என்னை மகிழ்விக்குமாறு நான் உன்னிடம் கேட்டுக்கொள்கிறேன்) கருத்து: எல்லா நேரங்களிலும் இந்த மகிழ்ச்சியை மீண்டும் மீண்டும் வழங்குவாயாக!
(والخير بيديك).'வல் கைரு பியதைக்க' (எல்லா நன்மைகளும் உன் கைகளில் உள்ளன) பொருள்: எல்லா நன்மைகளும் உன்னுடையது, அது உன் அருளால் தான் கிடைக்கப்பெறுகிறது (لبيك والرغباء إليك) லெப்பைக்க வர்ரஃபாஉ இலைக்க' (நான் உன் அழைப்புக்கு பதிலளிக்கிறேன், என் நம்பிக்கைகள் உன்னை நோக்கியே உள்ளன) பொருள்: எங்கள் நம்பிக்கைகள், எங்கள் ஆசைகள், எங்கள் தேவைகள் அனைத்தும் உன்கைவசம் உள்ளது அவற்றை நீ மட்டுமே நிறைவேற்ற முடியும். (والعمل) 'வல்அமல்' (மற்றும் செயல்கள்) பொருள்: வழிபாடு, நல்ல செயல்கள் - உனக்காக செய்யப்படுகின்றன, ஏனென்றால் நீ மட்டுமே வணக்கத்திற்கு தகுதியானவன்.

03
Benefits
ஹஜ் மற்றும் உம்ராவின் போது தல்பியா கூறுவது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட மிக முக்கியமான சுன்னாவாகும். தொழுகையின் சின்னமாக தக்பீர் இருப்பது போன்று ஹஜ் உம்ராவின் சின்னமாக தல்பியாக உள்ளது.
இப்னுல்-முனீர் கருத்துப்படி, தல்பியா முழங்குவதில் அல்லாஹ் தனது அடியார்களுக்கு அளித்துள்ள கண்ணியத்தை எடுத்துக்காட்டுகிறது. தல்பியாவை கூறுவதன் மூலம் ஹஜ் அல்லது உம்ராவுக்காக அல்லாஹ்வின் ஆலயத்திற்கு (பைத்துல்லா) வரும் ஒவ்வொரு யாத்ரீகரும் அல்லாஹ்வின் அழைப்பின் பேரில்தான் தாம் ஹஜ் உம்ராவுக்குக்கான சந்தர்ப்பத்தைப் பெற்றார்கள் என்பதை நினைவில் கொள்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய தல்பியாவைப் கடைப்பிடிப்பிடிப்பது மிகவும் சிறந்தது. இருப்பினும், நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்தபடி இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு சேர்த்த வார்த்தைகளைத் தனித்தனியாக ஓதுவது தவறல்ல. இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள்: இது மிகவும் நடுநிலையான ஏற்றுக்கொள்ளத்தக்க நிலைப்பாடாகும். இந்த அடிப்படையில் நபி அவர்கள் மூலமாக நேரடியாகக் அறிவிக்கப் பட்டுள்ள தல்பியாவை தனியாக ஓத வேண்டும். பின்னர் தோழர்கள் ( நபித்தோழர் கூற்று மற்றும் செயல்) சேர்த்த வார்த்தைகள் அல்லது தாங்களாகவே சேர்த்த பொருத்தமான வார்த்தைகள் தனித்தனியாகச் சொல்லப்படல் வேண்டும். காரணம் ஸஹாபாக்கள் கூறியவை (மவ்கூபானவை) நபியவர்கள் கூறியவற்றுடன் கலந்து விடாது இருப்பதற்காகவே இவ்வாறு தனித்தனியாக கூறல் வேண்டும். இது தஷஹ்ஹுதில் செய்யப்படும் துஆவைப் போன்றது அதாவது தஷஹ்ஹுத் முடிந்ததும், நபியவர்கள் கூறிய துஆக்களை ஒதியதன் பின்னர் ஒருவர் தனக்கு விருப்பான தேர்ந்தெடுத்த துஆ மற்றும் புகழ்வதற்காக வார்த்தைகள் தனித்தனியாக ஓதுவதற்கு அனுமதியிருக்கிறது. இதே நடைமுறையை தல்பியாவிலும் பின்பற்ற வேண்டும்.
ஆண்கள் தல்பியாவை சத்தமாக கூறுவது முஸ்தஹப்பாகும்.-வரவேற்கத்தக்க விடயமாகும்- இருப்பினும், பெண்களின் குரல் மற்றவர்களை ஈர்க்கும் ஆபத்து இருப்பதால் சப்பதத்தை குறைத்து மெதுவாக தல்பியா கூறுவது விரும்பத்தக்கது.

Attribution
[இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]
Categories
Share
Share hadeeth
Sharing options · 0 Total shares