افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم.
#4454[சரியானது]
HadeethEnc · 1.36.0

'நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை ஆகிய அனைவர் மீதும் ஒரு ஸாஉ உணவு அல்லது ஒரு ஸாஉ பாலாடைக் கட்டி அல்லது ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழம், அல்லது ஒரு ஸாஉ அளவு தொலி நீக்கப்படாத கோதுமை, அல்லது ஒரு ஸாஉ உலர்ந்த திராட்சை

Available translations

Choose an available translation of this Hadeeth

01

Hadeeth text

அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: 'நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை ஆகிய அனைவர் மீதும் ஒரு ஸாஉ உணவு அல்லது ஒரு ஸாஉ பாலாடைக் கட்டி அல்லது ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழம், அல்லது ஒரு ஸாஉ அளவு தொலி நீக்கப்படாத கோதுமை, அல்லது ஒரு ஸாஉ உலர்ந்த திராட்சை ஆகியவற்றில் ஒன்றை (ஏழைகளுக்கு) நோன்புப் பெருநாள் தர்மமாக முஆவியா ரழியல்லாஹு எம்மிடம் வரும்வரையில் இவ்வாறு கொடுத்து வந்தோம். முஆவியா இப்னு அபூ சுஃப்யான் (ரழி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ரா செய்யும் நோக்கத்துடன் எங்களிடம் வந்து மிம்பரில் அமர்ந்து மக்களிடம் பேசியபோது 'ஷாம் (சிரியா) நாட்டு உயர்ரகக் கோதுமை இரண்டு 'முத்துகள்' ஒரு ஸாஉ பேரீச்சம்பழத்திற்குச் சமம் என்று தான் கருதுவதாகக் கூறினார். எனவே மக்கள் அதைச் செய்யத் தொடங்கினர். அபூ ஸஈத்; (ரழி) அவர்கள், 'நான் உயிருடன் இருக்கும் வரை, நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நான் கொடுத்த அதே அளவு ஸகாத் அல்-ஃபித்ரை தொடர்ந்து கொடுப்பேன்' என்று கூறினார்கள்.
02

Explanation

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்திலும், அவருக்குப் பிறகு வந்த கலீஃபாக்கள் காலத்திலும், முஸ்லிம்கள் சிறியவர்கள் அல்லது பெரியவர்கள் என ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு ஸாஉ உணவை ஸகாத்துல் பித்ராக கொடுத்து வந்தனர். அந்த நாட்களில் அவர்களின் உணவு: பார்லி, உலர்ந்த திராட்சை, பதப்படுத்தப்பட்ட பாலாடைக் கட்டி மற்றும் பேரீச்சம்பழம் ஆகியவனாகும். ஒரு ஸாஉ என்பது நான்கு முத்துகளாகும். ஒரு முத் என்பது ஒரு சாதாரண மனிதனின் இரண்டு கைப்பிடிகள் கொள்ளும் கொள்ளளவிற்கு நிகரானதாகும். முஆவியா (ரழி) அவர்கள் கலீபாவாக இருக்கும் வேளை மதீனாவிற்கு வந்தார். அந்நேரம் சிறிய கோதுமை அதிகளவில் காணப்பட்டது. மதீனாவுக்கு வந்த போது மக்களுக்கு ஓர் உரை நிகழ்த்தினார்; அதில் அவர் : இரண்டு முத்து சிறிய கோதுமை ஒரு ஸாஉ பேரீச்சம்பழத்திற்குச் சமம் என்று தான் அபிப்பிராயப்படுவதாக குறிப்பிட்டார்கள். எனவே மக்கள் அவரது கூற்றின்படி செயல்படத் தொடங்கினர். ஆனால் இக்கருத்தை அபூ ஸஈத் (ரழி) ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வேளை அபூ ஸஈத் (ரழி) அவர்கள்: நான் உயிருடன் இருக்கும் வரை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் நான் கொடுத்தது போலவே, ஸகாத்துல் பித்ரை கொடுப்பேன் என்று கூறினார்.
03

Benefits

இந்த ஹதீஸில்; நபி (ஸல்) அவர்களின் காலத்தில், ஸகாத்துல் பித்ரின் அளவு ஒரு 'ஸாஉ' உணவு என்ற விடயம் விபரிக்கப்பட்டுள்ளமை. இதில் உணவின் வகை மற்றும் பெருமதி வித்தியாசப்பட்டாலும் அது கருத்திற் கொள்ளப்பட மாட்டாது.
மனிதர்கள் பிரதான உணவாகக் கொள்ளும் அனைத்திலும் ஸகாத்துல் பித்ர் வழங்க அனுமதியுண்டு. ஹதீஸில் நான்கு வகையான உணவுகள் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஏனெனில் இவை நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மக்கள் சாப்பிட்ட உணவு வகைகளாகும்.
ஸகாத்துல் பித்ருக்கு உணவைத் தவிர வேறு பணத்தையோ அல்லது நாணயங்களையோ கொடுப்பது செல்லுபடியாகாது.
ஷர்ஹ் முஸ்லிமில் இமாம் நவாவி கூறுகிறார்: ஒரு விடயம் தொடர்பாக நபித் தோழர்களிடையே கருத்து வேறுபாடு காணப்பட்டால், அவர்களில் ஒருவரின் கருத்து மற்ற ஒருவரின் கருத்தை விட சிறந்ததாக இருக்க முடியாது. ஆகவே இது போன்ற சந்தர்ப்பங்களில், வேறு ஆதாரங்களை நாம் தேட வேண்டும். இந்த வகையில், ஹதீஸ்களின் வெளிப்படையான கருத்தும், கியாஸும் மற்ற உணவுப் பொருட்களைப் போலவே கோதுமையும் ஸகாத்துல் பித்ராவாக கொடுக்கப்பட்டால் அதன் அளவு ஒரு ஸாஆவாக இருக்க வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிடுவதால் அதனை நாம் ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.
இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்: அபூ ஸஈத் அல்-குத்ரி (ரழி) அவர்களின் இந்த ஹதீஸ், அவர் சுன்னாவைப் பின்பற்றுவதிலும், மரபுகளைப் பேணி நடப்பதிலும், தெளிவான ஆதாரம் இருக்கும் நிலையில் இஜ்திஹாதைத் தவிர்ப்பதிலும் அவருக்கிருந்த ஆர்வத்தை-உறுதியை- எடுத்துக்காட்டுகிறது. முஆவியா (ரழி) அவர்களின் இஜ்திஹாதும் அதனை மக்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டமையும் இஜ்திஹாத் அனுமதிக்கப்பட்டது என்பதற்கும் அது பாராட்டத்தக்க விடயம் என்பதற்கான சான்றாகும் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் ஒரு தெளிவான ஆதாரம் இருக்கும் போது குறித்த விடயத்தில் இஜ்திஹாத் செய்வது செல்லு படியாக மாட்டாது.

Attribution

[இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]

Categories

Share

Share hadeeth

Sharing options · 0 Total shares

Share

← Back to encyclopedia
Shopping Basket

Loading...