HadeethEnc · 1.36.0
'இந்த இரண்டும் என் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளன, பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன' என்று கூறினார்கள்”
Available translations
Choose an available translation of this Hadeeth
01
Hadeeth text
அலீ பின் அபீதாலிப் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது இடது கையில் பட்டையும், வலது கையில் தங்கத்தையும் எடுத்து, இரு கைகளையும் உயர்த்தி, 'இந்த இரண்டும் என் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளன, பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன' என்று கூறினார்கள்”.
02
Explanation
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இடது கையில் ஒரு பட்டுத் துணியையும், அல்லது பட்டுத் துண்டு ஒன்றையும், வலது கையில் ஒரு தங்க ஆபரணம் அல்லது அது போன்ற ஒன்றை எடுத்துக்கொண்டு, 'உண்மையில், பட்டு மற்றும் தங்கம் அணிவது ஆண்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அது பெண்களுக்கு அனுமதிக்கப்படுகிறது' என்று கூறினார்கள்.
03
Benefits
இமாம் சிந்தி அவர்கள் கூறுகிறார்கள்: இவை இரண்டும் தடைசெய்யப்பட்டவை என்பதன் அர்த்தம், அவற்றை ஆடையாகப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது (ஹராம்) என்பதாகும். இருப்பினும், ஆண்களும் பெண்களும் அவற்றை நாணயமாகவோ, பரிசுகளாகவோ அல்லது வணிகப் பொருளாகவோ (வாங்குதல் விற்றல் ) பயன்படுத்தலாம். தங்கப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலாருக்கும் தடைசெய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கு அலங்காரம் போன்ற தேவைகள் இருப்பதால், இஸ்லாமிய சட்டமானது அவர்களின் உரிமைகளை இந்த விடயத்தில் விரிவுபடுத்தியுள்ளது.
பெண்களுக்கு அலங்காரம் போன்ற தேவைகள் இருப்பதால், இஸ்லாமிய சட்டமானது அவர்களின் உரிமைகளை இந்த விடயத்தில் விரிவுபடுத்தியுள்ளது.
Attribution
[இமாம்களான அபூதாவுத், நஸாஈ, இப்னுமாஜா ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது]
Categories
Share
Share hadeeth
Sharing options · 0 Total shares

