HadeethEnc · 1.36.0
நிச்சயமாக மண்ணறைதான் மறுமையின் படித்தரங்களில் முதலாவது படித்தரமாகும். அதில் தப்பிவிட்டார் என்றால், அதற்குப் பின்னால் உள்ளது அதை விட இலகுவாக இருக்கும். அதிலிருந்து தப்பா விட்டால், அதற்குப் பின்னால் உள்ளது அதை விடக் கடினமாக இருக்கும்
Available translations
Choose an available translation of this Hadeeth
01
Hadeeth text
உஸ்மான் (ரலி) அவர்களது அடிமையாக இருந்த, ஹானிஃ அவர்கள் கூறுகின்றார்கள் : உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு கப்ருக்கு முன்னால் நின்று விட்டால், தமது தாடி நனையும் வரை அழுவார்கள். அப்போது அவரிடம், சுவனம் மற்றும் நரகம் பற்றிக் கூறப்படும் போது அழமாட்டீர்கள். ஆனால், இதற்காக அழுகின்றீர்களே? எனக் கேட்கப்பட்ட போது, நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நிச்சயமாக மண்ணறைதான் மறுமையின் படித்தரங்களில் முதலாவது படித்தரமாகும். அதில் தப்பிவிட்டார் என்றால், அதற்குப் பின்னால் உள்ளது அதை விட இலகுவாக இருக்கும். அதிலிருந்து தப்பா விட்டால், அதற்குப் பின்னால் உள்ளது அதை விடக் கடினமாக இருக்கும்.
02
Explanation
உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு கப்ருக்கு முன்னால் நின்றுவிட்டால், தமது கண்ணீரினால் தாடி நனையும் வரை அழுவார்கள். அப்போது அவரிடம், சுவனம் மற்றும் நரகம் பற்றிக் கூறப்படும் போது, சுவர்க்கத்திற்கு ஆசைப்பட்டோ, நரகைப் பயந்தோ அழமாட்டீர்கள். ஆனால், மண்ணறையைப் பார்த்து அழுகின்றீர்களே? எனக் கேட்கப்பட்ட போது, நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நிச்சயமாக மண்ணறைதான் மறுமையின் படித்தரங்களில் முதலாவது படித்தரமாகும். அதில் தப்பிவிட்டார் என்றால், அதற்குப் பின்னால் உள்ள படித்தரங்கள் அதை விட இலகுவாக இருக்கும். அதிலிருந்து தப்பா விட்டால், அதற்குப் பின்னால் உள்ள தண்டனைகள் அதை விடக் கடினமாக இருக்கும்.
03
Benefits
உஸ்மான் (ரலி) அவர்கள் சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்ட ஒருவராக இருந்தும், அவர்களிடம் காணப்பட்ட அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தைத் தெளிவுபடுத்தல்.
மண்ணறை மற்றும் மறுமையின் பயங்கரங்களை நினைவுபடுத்திக் கொள்ளும் போது அழுவது மார்க்கம் காட்டிய ஒன்றாகும்.
மண்ணறையின் இன்பம் மற்றும் வேதனையை உறுதிப்படுத்தல்.
மண்ணறையின் வேதனையை விட்டும் எச்சரித்தல்.
மண்ணறை மற்றும் மறுமையின் பயங்கரங்களை நினைவுபடுத்திக் கொள்ளும் போது அழுவது மார்க்கம் காட்டிய ஒன்றாகும்.
மண்ணறையின் இன்பம் மற்றும் வேதனையை உறுதிப்படுத்தல்.
மண்ணறையின் வேதனையை விட்டும் எச்சரித்தல்.
Attribution
[இமாம் திர்மிதி, இமாம் இப்னு மாஜா ஆகியோரால் பதிவு செய்யப்பட்டது]
Categories
Share
Share hadeeth
Sharing options · 0 Total shares

