الوسائل التي تفيد تجنب الزنا والشذوذ
باللغة التاميلية
விபச்சாரத்தை விட்டு விலகி இருக்க இஸ்லாம் கூறும் முக்கிய வழிகள்
| தக்கவாவை கடைப்பிடித்து அதிகம் துஆவில் ஈடுபடல்.
நபி யூசுப் )அலை( அவர்கள் அல்லாஹ்விடம் இப்படி பிரார்த்தித்தார்கள்: என் இறைவா பெண்களின் சூழ்ச்சியிலிருந்து என்னை நீ காப்பாற்றவில்லை என்றால் நான் அவர்களின் பக்கம் சாய்ந்து விடுவேன். ( யூசுப்: 33.( |
அல்லாஹ்வுக்காக ஒன்றை விடுவதால் அல்லாஹ் அதற்கு பதிலான ஒன்றை தருவான் எனும் எண்ணத்தை வரவழைத்துக் கொள்ளல். நபி (ஸல் ) கூறினார்கள்: மனிதா! நீ ஒன்றை அல்லாஹ்வுக்காக விட்டால் அதைவிட சிறந்த ஒன்றை அல்லாஹ் உனக்கு தராமல் விடமாட்டான். (நூல் அஹ்மத்)
. |
இச்சைகளை தூண்டும் பேச்சுகளை தவிர்த்தல். சபைகளில் இத்தகைய உணர்வைத் தூண்டும் சொல், செயல்களை தவிர்த்தல். | வசதி வாய்ப்புகள் இருப்பின் திருமணத்தை தீவிரப் படுத்தல். முடியாவிடின் நோன்பு நோற்றுக் கொள்ளுதல்.
நபி (ஸல்)கூறினார்கள்: நிச்சயமாக நோன்பு கேடயமாகும். (நூல் புகாரி முஸ்லிம்) |
பாலுணர்வை பலவீனப்படுத்த உண்ணல் பருகல் ஆகியவற்றை குறைத்தல் | . பார்வையை தாழ்த்தி பெண்கள் காணப்படும் மார்க்கெட்டுகள் போன்ற இடங்களில் இருந்து தூரமாக இருத்தல் .
அன்னிய பெண்களுடன் தனிமையில் இருப்பதை தவிர்த்தல். |
பெண்களை இஸ்லாமிய ஹிஜாப் அணியுமாறு பணித்தல், அவர்களுடன் குலைந்து பேசுவதை தவிர்த்தல். மேலும் அவர்களுடன் தனிமையில் உறவாடுவது,கைலா கு கொடுப்பது, ஒன்றென கலந்திருப்பதை தவிர்த்தல். |
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) |
| விபச்சாரம், ஓரினச்சேர்க்கையிருந்து விலகி இருக்க இஸ்லாம் கூறும் மிக முக்கிய வழிகள். | ||||||
| (8) | (9) | (10) | (11) | (12) | (13) | (14) |
| சூரா யூசுப் போன்ற படிப்பினைக்குரிய சூராக்களை படிப்பதும் சிந்திப்பதும்.
அவ்வாறே குர்ஆன் சுன்னாவில் இடம் பெற்றுள்ள வரலாற்று சம்பவங்கள், முன் சென்ற நல்லோர்களின் வரலாறு ஆகியவற்றை படித்தல். |
நன்மையை ஏவி தீமையை தடுக்கும் நல்லோர்களுடன் தோழமை கொண்டு வெறுக்கத்தக்க காரியங்களின் பக்கம் தூண்டும் தீய நட்புகளை தவிர்ந்து வாழுதல். | (நீ நடப்பது போலவே நடாத்தப்படுவாய்) எனும் விதியை எண்ணிப்பார்க்கவேண்டும்.
விபச்சாரம் தீர்க்கப்டவேண்டிய கடன் போன்றதே. விபச்சாரம் செய்பவர் அதனாலேயே சோதிக்கப்படுவார். |
ஓய்வை தவிர்த்து அதிகம் உள்ளத்தை நன்மையான விடையங்களில் ஈடுபடுத்தல்.
ஓய்வென்பது மனிதனை கொல்லும் ஒன்றாகும், தனிமையில் இருக்கும் போதே மனசும் ஷைத்தானும் பாவத்தை தூண்டுகின்றனர். |
இச்சைகளை தூண்டும் தொடர்பு சாதனங்களை தவிர்த்தல், குறிப்பாக இன்று காணப்படும் எலக்ட்ரானிக் சாதனங்கள் அதில் பயன்படுத்தப்படும் செயலிகள் பயன்பாடை தவிர்த்தல். |
தொலைபேசி, கனணி போன்றவற்றை ஏனையோர் காணும் விதமாக பகிரங்கமான இடத்தில் வைப்பது பயன்படுத்துவது. காரணம் மனிதன் தனிமையில் இருக்கும்போதே பலவீனம் அடைகின்றான். | நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பணியை கவனமாக பேணி வரல். அதில் குறைந்த பட்சம் உள்ளத்தால் வெறுத்தேனும் பாவத்தை குறைத்தல். அவ்வாறு செய்யும்போது உள்ளம் உயிர்பிக்கப்பட்டு நன்மையின் பக்கம் ஆசை கொள்ளும்.
|